முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் - கிழக்கு முஸ்லிம்களிடம் கெஞ்சுகிறார் காதர்
TN
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு வாக்களிப்பது எம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு ஒப்பானது என சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். ‘கிழக்கு முஸ்லிம்களுடன் ஒருசில நிமிடம்’ எனும் தலைப்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு,
கிழக்கு முஸ்லிம்கள், சகோதரத்துவம், ஒற்றுமை, சுபீட்சமான எதிர்காலம் போன்ற விடயங்களை நிலைநிறுத்தும் போராட்டமாக எம் மாகாண சபைத் தேர்லை எதிர்கொள்ளவுள்ளனர். வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டதன் பிற்பாடு அமைதியான சூழ்நிலையில் மேற்படி பிரதான மூன்று விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முன்னெடுப்பு, அண்மைக்கால சூழ்நிலைகளை வைத்து பார்க்கும் போது அஸ்தமித்து வருமோ என்ற அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது. கிழக்கில் அமைதியின்மையை தோற்று வித்து மீண்டும் இரத்தாற்றை ஓடவைக்க ஒருசாரார் முயற்சி செய்ய மறுபக்கம் அதற்கு துணை போவது போல் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டு மென்று பகிரங்கமாக கூறி கிழக்கு முஸ் லிம்களுக்கு வரலாற்றுத் துரோகமிழைக்க மு.கா. தலைமைத்துவம் முயற்சி செய்து வருகின்றது.
வடகிலிருந்து கிழக்கைப் பிரித்து முஸ்லிம் சமூகத்துக்கு அமைதியை ஏற் படுத்திக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்களின் எதிரியாகக் காட்ட மு.கா. தலைமை முனைவது அனைத்து முஸ்லிம்களையும் பேரதிர்ச்சிக்குள்ளும் வெட்கத்துக்குள்ளும் ஆழ்த்தி யுள்ளது.
அற்பசொற்ப மாகாண சபை அமைச்சு பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் துவேஷக் கருத்துக்களை கிழக்கில் கக்கி வாக்குச் சூறையாடும் கைங்கரியத்தில் மு.கா. தலைமைத்துவம் அகல கால் ஊன்றியுள்ளது.
இந்தக் கட்டத்தில்தான் கிழக்கு முஸ்லிம்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டி யுள்ளது. வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்து கிழக்கு முஸ்லிம்களை கொன்று குவிக்க துணை போகும் மு.கா. வை ஆதரிப்பதா அல்லது கிழக்கு முஸ்லிம்களை அமைதியாக வாழவைக்க விரும்பும் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஐ.ம.சு.மு. அரசை ஆதரிப்பதா என்பதை முஸ்லிம்களாகிய நீங்கள் அவசிய அவசரமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் 9 மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் கிழக்கு மாகாணமாகும். அந்த கிழக்கிலிருந்து முஸ்லிம் முதலமைச்சரை இம்முறை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கனிந்து வரும் இன்றைய நிலையில், அதனை அஸ்த்தமனமாக மு.கா தலைமை வாடிக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என கோஷமிடுகின்றது.
இது கிழக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி உலகளாவிய முஸ்லிம்களுக்கே செய்யும் வரலாற்று துரோகமாகும். மட்டுமன்றி கிழக்கு முஸ்லிம்களின் அடையாளத்தை குழிதோண்டி புதைக்க முனைவதுமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல இனங்களையும் சமத்துவமாக நேசிக்கும் அரசியல் தலைவன் அவரின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் சமுகம் கெளரவமாக தலைநிமிர்ந்து நிற்கின்றது.
இந்த கெளரவத்தை சகித்துக் கொள்ள முடியாத ஓரிரு துவேஷ கூட்டத்தினர் ஜனாதிபதியை முஸ்லிம்களின் எதிரியாகக் காட்ட முனைகின்றன. தெற்கு, ஜனாதிபதியின் அமைச்சரவையில் பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மு.கா. தலைவர் துணைபோகக் கூடாது.
அமைச்சரவை அமைச்சு பதவியை விதித்துக் கொண்டு வடமத்தியில் ஜனாதிபதியை புகழ்வதும் கிழக்கில் முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகங்கள் மத்தியில் இழிவாக காட்ட முனைய வேண்டாமென மு.கா. தலைமையை நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
நிபந்தனையில்லாமல் இணைவதும் நிபந்தனையில்லாமல் விலகுவதிலும் கைதேர்ந்த மு.கா. தலைமைத்துவம் இம்முறை தேர்தலில் தாம் அடையப் போகும் தோல்வியை சரி செய்ய பேசும் ‘துவேஷ‘ வார்த்தைப் பிரயோகங்களுக்கு சாவுமணி அடிக்க கிழக்கு முஸ்லிம்கள் உடன் தயாராக வேண்டும்.
ஜனாதிபதியை பலப்படுத்துவதன் மூலம்தான் விமோசனமடையலாம். முஸ்லிம்கள் ஜனாதிபதியுடன் இருந்தால்தான் நாம் முன்னேற்றம் காணலாம். எதிர்த்து நின்றால் நாம் பின்னடைலேயே காண்போம் என்றும் அந்தறிக்கையில் பிரதியமைச்சர் அப்துல் காதர் குறிப்பிட்டுள்ளார்.
HON CADER HAJIYAR YOU ARE OK AND YOU EXPERIENCE MAN BUT HAKEEM SMALL BABY IN POLITICAL SITE. HE WILL TAKE AN OTHER THIRTY YEARS TO GET POLITICAL EXPERIENCE UNTIL SLMC PARTY AND THAT PARTY SUPPORTERS (POORALIGAL) LOST.
ReplyDeleteMuslimkalin pallivaayalhal udaikapaduhintrathu athu sampanthamaaha oru vaarthai illai vanthuttaru avarum muslim???????
ReplyDeleteThe best commodian ever but sadly he represents our community shame that we voted for such a man
ReplyDeleteyes you are right milhar, no use speaking about cader, he is se less fellow for our religion,
ReplyDeleteCADER ONLY NAME ONLY MUSLIM AS FAR AS I KNOW, HE DOESN,T HAVE ANY WORK OR HELP FOR OUR SOCIETY, ALSO HE IS WASTE MINISTOR FOR OUR RELIGION,
ReplyDeleteRIMZAN RIZAN
GAMPOLA
All Muslim shut ask Some non Muslim MP's are in parliament There keep there name Same like Muslim for Example : Kader (Kandy), Azwer (Puttlem), Fawzi (Colombo}, Athaulla (Akkarapathu).Please Whole Muslim shut be ask them to change there name Like Bandara/ Muniyandi/Pundiyandi/Sivalingum Like that. some time this name holder also batter then this MP's
ReplyDelete