Header Ads



மூத்த தலைவர் பதருத்தீன் ஹக்கானி வபாத்தாகவில்லை - தலிபான் மறுக்கிறது

 
மூத்த தலைவர் பதருத்தீன் ஹக்கானி கொலைச் செய்யப்பட்டார் என்ற செய்தியை தாலிபான் மறுத்துள்ளது.

நேற்று முன்தினம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் தாலிபான்(ஹக்கானி பிரிவு) தாக்குதல் பிரிவைச் சார்ந்த பதருத்தீன் ஹக்கானி கொல்லப்பட்டார் என்று மூத்த அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

ஆனால், பதருத்தீன் ஹக்கானிஉடல்நலத்துடன் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக, தாலிபான் செய்தி தொடர்பாளர் ஊடகங்களுக்கு அளித்துள்ள இ-மெயில் செய்தியில் கூறியுள்ளார்.

ஜலாலுத்தீன் ஹக்கானி என்பவரால் உருவாக்கப்பட்ட தாலிபான்(ஹக்கானி) அமைப்பில் 2-வது பெரிய தலைவராக பதருத்தீன் ஹக்கானி கருதப்படுகிறார். வஸீரிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா நடத்திய அடாவடி ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியான 18 பேரில் பதருத்தீன்  ஹக்கானியும் அவரது மெய்க்காவலர்களும் அடங்குவர் என செய்தி வெளியானது.

1 comment:

  1. அமெரிக்காக்கு விரவில் அடி கிடைஇக்க வென்டும்.

    ReplyDelete

Powered by Blogger.