இலங்கை தஃவா இயக்கங்கள் குண்டுச்சட்டிக்குள் வண்டியோட்டுகின்றன - மௌலவி முபாரக்
ஐந்து நேரம் தொழுவது சமூகங்களுக்கிடையில் விரிசல்களை உண்டாக்கும் என சிங்கள சமூகம் நினைக்கிறது என்றால் அதற்குரிய முழு பொறுப்பையும் இந்த நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தஃவா களத்தில் இருப்பதாக சொல்லும் அமைப்புக்களே ஏற்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நமது நாட்டில் தப்லீக், தவ்ஹீத், ஜமாஅத் இஸ்லாமி, தரீக்கத் என பல ஜமாஅத்துக்கள்- அமைப்புக்கள் சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. அப்படி இருந்தும் இந்தச்சிறிய நாட்டில் வாழும் ஏனைய மதத்தவர்கள் இஸ்லாத்தையும், தொழுகையையும் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்த இயக்கங்கள் இது கால வரை குண்டுச்சட்டிக்குள் வண்டியோட்டி வந்துள்ளன என்றே தெரிகிறது.
மேற்படி ஜமாஅத்துக்கள் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தின் சில சில பகுதிகளை பிரித்தெடுத்துக்கொண்டு அவற்றை பிரச்சாரம் செய்வதில்தான் காலம் கடத்தியுள்ளனரே தவிர இஸ்லாத்தின் தஃவாவை மற்றவர்களிடம் எத்தி வைக்கவேயில்லை என்பது வெளிச்சமாகிறது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பத்து வருடங்கள் மட்டுமே வாழ்நதார்கள். இந்தக்கால எல்லைக்குள் முஸ்லிம்களிடம் தஃவாச்செய்து கொண்டிருக்கவில்லை. மாறாக ஏனையவர்களிடம் தஃவாவை எத்திவைப்பதற்கே குழுக்களை அனுப்பி வைத்தர்கள். இன்று எமது அமைப்புக்கள் முஸ்லிம்களிடம் தஃவா செய்வதாக குர்ஆன் ஹதீதுக்கு சொல்லி தம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தஃவா என்ற சொல் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாமிய அறிவின்பால் அழைக்கும் சொல்லாகும். முஸ்லிம்களுக்கு தொழுகை, ஈமான், தவ்ஹீத் போன்றவற்றை கற்றுக்கொடுப்பதற்கு தஃலீம் என்றே குறிப்பிடப்படுகிறது.
முஸ்லிம் அமைப்புக்கள் முதலில் முஸ்லிம்களை திருத்தி விட்டு பின்னர் மற்றவர்களிடம் செல்லப்போவதாக சுன்னாவுக்கு முரனாக செயற்படுகிறார்கள். நபியவர்கள் காலத்து மதினத்து முஸ்லிம்கள் மத்தியலும் தவறுகள், பொடுபோக்குகள் இருக்கத்தான் செய்தன. இருந்தும் நபியவர்கள் முஸ்லிம்களை திருத்தி முடிக்க வேண்டும் என்றிருக்கவில்லை. மாறாக கொஞ்ச நேரம் முஸ்லிம்களுக்காகவும் பெரும்பாலான நேரங்களை மற்றவர்களுக்குமாகவே செலவு செய்தார்கள்.
இந்த உண்மைகளை உணராமல் எமது ஜமாஅத்துக்கள் தமது நேரத்தையும், பணத்தையும் வீணடித்ததன் பிரதி பலன்தான் தொழுகைகளால் சமூகங்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுகின்றன என மாற்று மதத்தவர்கள் பிழையாக விளங்கியமையாகும். முஸ்லிம்கள் மத்தியில் எமது ஜமாஅத்துக்கள் தங்களது வீரத்தனத்தையும், பிரசங்கித்தனத்தையும் காட்டினார்களே தவிர அழகிய முறையில் மற்றவர்களிடம் செல்லாததன் விளைவை இன்று முஸ்லிம் சமூகம் அனுபவிக்கிறது. இந்த ஜமாஅத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை முடியுந்தருவாயில் உள்ளது.
ஆகவே இவற்றுக்கான முழு பொறுப்பையும் எமது ஜமாஅத்துக்கள் ஏற்பதோடு இனியாவது தங்களது நேரத்தையும், காலத்தையும், முயற்சிகளையும் முஸ்லிம்கள் மத்தியிலேயே சுற்றிவருவதற்கு பாவிக்காமல் ஏனைய சகோதரர்களுக்கு சத்தியத்தை விளக்க முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
நீங்க அங்கம் வஹிக்கும் உங்க ஜமாஅத் என்ன செய்றிங்க என்னத்த செஞ்சிங்க
ReplyDeleteஅப்பு முபாரக், நீர் ஒரு மவ்லவியல்லே? மத்தவையல் செய்யலே யெண்டு குற சொல்லாமல், நீரே உதச் செய்யலாமே அப்பு!
ReplyDeleteஐசே, பேந்து எதுக்கு நீர் போளிடிக்சுக்கு இறங்கினீர்? ஒருக்கா மகிந்தருக்கு சப்போர்ட் பண்ணுறீர், பேந்து நல்ல வடிவா குட்டுக் கரணம் அடிச்சு ரணிலாருக்கு
சப்போர்ட்டு பண்ணுறீர். அப்பு, உமக்கு உந்தப் பிழைப்பு தேவையா? மந்தி மாதிரி குட்டுக் கரணம் போடுற தொழில் செய்யுற நீர் எதுக்கைய்யா மவ்லவி எண்டு போட்டுக் கொள்ளுரீர்?
Hello, hello Moulavi Mubark excuse me.
ReplyDeleteநீங்கள் சொல்வது வஸ்த்தவம்தான்.
உங்களுக்கு எத்தனை வயசாகின்றது?
நீங்கள் மௌலவிப் பட்டம் பெற்று எத்தனை வருடங்களாகின்றன?
உங்களது மௌலவிப் பட்டத்துக்குப் பின்னால் ”மார்க்கத்துக்கான பங்களிப்பு” என்று நன்மை கருதி இந்தச் சமூகம் செலவு செய்திருக்கும் இலட்ஷங்கள் எத்தனை?
மார்க்த்துக்காகவே என்று பட்டம் பெற்ற நீங்கள் இதுவரை எத்தனை பேருக்கு இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்திருக்கின்றீர்கள்.
மற்றவருக்கு விரல் நீட்டுவதற்கு முன்னர் உங்களைக் கொஞ்சம் சுய விசாரணை செய்து கொள்ளுவது நல்லது.
இப்படியே தொடர்ந்தும் யாருக்காவது கருத்துச் சொல்லிக் கொண்டு இருப்பதனை விட்டுவிட்டு உருப்படியாக சாதிக்கப் பாருங்கள்.
எல்லோறுக்கும் சொல்லும் உங்களுக்கு அந்த கடமை முதலாவதாக இருக்கிறது உங்கள் வாழ்கையில் கற்ற மார்க அறிவைகொண்டு எத்தனை ஆயிரகணக்கான மக்களுக்கு சத்தியத்தை எத்திவைதிறிக்கிறீர்கள் நீங்கள்???
ReplyDeleteவருடத்திலே 1,000 நபர்களுக்கு மேல் இஸ்லாத்தில் வருகின்றனர் அவர்களில் அதிகமானோர் வருவது முஸ்லிம்களின் நட்பண்புகளையும் நடத்தையையும் பார்தே இஸ்லாம் அடுத்தவர்களிடம் வாயால் சொல்லபடுவதை விட இஸ்லாம் வாழ்கையில் முழுமையாக கடைபிடிக்கபடுவதன் மூலம் அந்நியமக்களுக்கு பார்தாளே தெளிவை கொடுக்க வேண்டும் அல்லாஹ்வின் தூதரும் செயலாலும் தன் நடத்தைகளினாலுமே அதிகனாமோறை ஈத்தவராக இருந்தார்கள்
வருடத்திலே 1,000 நபர்களுக்கு மேல் இஸ்லாத்தில் வருகின்றனர் அவர்களில் அதிகமானோர் வருவது முஸ்லிம்களின் நட்பண்புகளையும் நடத்தையையும் பார்தே இஸ்லாம் அடுத்தவர்களிடம் வாயால் சொல்லபடுவதை விட இஸ்லாம் வாழ்கையில் முழுமையாக கடைபிடிக்கபடுவதன் மூலம் அந்நியமக்களுக்கு பார்தாளே தெளிவை கொடுக்க வேண்டும் அல்லாஹ்வின் தூதரும் செயலாலும் தன் நடத்தைகளினாலுமே அதிகனாமோறை ஈத்தவராக இருந்தார்கள் இஸ்லாம் அந்நியர்களுக்கு கண்டிப்பாக எடுத்து சொல்லபடவேண்டும் ஆனால் அதடைவிட இஸ்லாம் நமது வாழ்வில் முழுமியாக வருவது அநியமக்களுக்கு மிக பெரிய தஃவாவாக அமையும்
முஸ்லிம் சமூகம் மட்டும் நட்குணத்தால் அழங்கறித்துகொண்டால் பகைமைகள் எல்லாம் பணிபோல கறைந்துவிடும்
நம்மை பற்றிய நன்மதிபும் மறியாதையும் உயர்ந்த பார்வையும் இருந்தாலேயே அந்நியர்கள் நாம் சொல்லுவதை நிதானத்துடன் அனுகுவார்கள்
ஆக தேவை முஸ்லிம் சமூகம் முழுமையாக இஸ்லாத்தில் நுளையவும் வேண்டும் தாங்கள் அனுபவிக்கும் இன்பங்களை செயலால் சொல்லால் நடத்தையால் அன்றாட வாழ்வின் அம்சங்களால் அடுதோறுக்கு எத்திவைபோராக இருக்கவும் வேண்டும்
நீங்கள் மௌலவி என்பது உங்களின் குச்சி தாடி காட்ட மறுக்கிறது,சுன்னத்தான தாடியை வையுங்கள்
ReplyDeleteநாங்க செய்ய மாட்டம், ஏனெண்டா நமக்கு எப்படிச் செய்யிறதெண்டு தெரியல. இவ்வளவு காலமும் புலியை காட்டி அலுவல் பாத்துக்கிட்டு திரிஞ்சம். இப்ப ஏலாம கிடக்கு.
ReplyDeleteஎல்லாவற்றையுமே குற்றம் குறை சொல்லும் முபாரக் மவ்லவி இந்தத் தடவை நன்றாக வாங்கிக் கட்டி விட்டார். தாடியைக் கூட ஒழுங்காக வைக்கத்தெரியாத இவர், இஸ்லாமிய இயக்கங்களை குறை சொல்லுவது வேடிக்கை.
ReplyDeleteஇந்த அறிக்கையில் ஒவ்வொரு தனிமனித முஸ்லிமும் பொறுப்பு என கூறப்பட்டதுபோல் பலர் கொமன்ட் அடித்துள்ளார்கள். ஐம்பது வருடத்துக்கு மேலான ஜமாத்துக்கலையே விமர்சிக்கப்பட்டுள்ளது. முபாரக் மௌலவி எந்த ஜமாத்தையும் சேர்ந்தவர் அல்ல. அவரது உலமா கட்சி ஏழு வருட வரலாறு கொண்டது. அது தாவா அமைப்பு அல்ல. ஒருவருடைய தாடி பெரிசா எது பெரிசு என்று பார்க்கும் மூடத்தனம் இன்னமும் முஸ்லிம்களிடம் இருப்பது கேவலம். அவாது முகத்துக்கு ஏற்ப வரும் தாடியை வைத்துள்ளார். முழு தாடியையும் சிரிக்கவில்லை. இப்படி இவற்றைத்தான் பாருங்கள். இது மடையர்களின் வேலை. நபியவர்கள் மதீனா முஸ்லிம்கள் முழுமையாக இஸ்லாத்தை கடைப்பிடிக்கட்டும் என இருக்கவில்ல. அவர்கள் மத்தியில் களவு விபச்சாரம் தொழுகையில் போடுபோக்கு என்பனவும் இருந்தன. அதனால்தான் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. தனிமனிதன் குறை காண்பதை விடுத்து கருத்தில் குறை இருக்கிறதா என்று பார்க்கும் புத்திசாலித்தனம் வேண்டும். முபாரக் மௌலவி புலிகளை அழிக்கும்போராட்டத்தில் மகிந்தவுடன் இருந்தார். பள்ளிகள் உடைப்பை எஹ்திர்த்து மகிந்தவை விட்டு விலகினார். பள்ளிகள் உடைக்கப்படுவது கண்டும் மகிந்தவுடன் இருக்க சொல்கிறீர்களா?
ReplyDeleteunkalukku oru kolhaye illaya?
ReplyDeleteசில வருடங்களாக பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்காக அறிக்கைகளை விட்டு உளவிக் கொண்டிருந்த முபாரக் மௌலவி இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிராகவும் அறிக்கை விட்டிருக்கிறார். இஸ்லாமிய இயக்கங்களை விமர்சிக்க இவருக்கு என்ன அருகதை இருக்கிறது. அவருடைய அறிக்கைக்கு எதிராக அன்பர்கள் செய்த கோமன்டுகளுக்கு வேறு ஒரு நபர் கருத்துத் தெரிவிப்பது போல் அவருடைய சொந்த மின்னஞ்ஞல் முகவரியிலிருந்து (Aljazeera lanka) கோமன்ட் செய்திருக்கிறார். அவருடைய குப்பைப் பத்திரிகையான Aljazeera வின் உத்தியோக பூர்வ மின்னஞ்ஞல் இது. இதனை மறுக்க அவரால் முடியுமா? இதிலிருந்து இப்படிப்பட்ட கோமாலிகளின் சாயம் வெலுக்கிறது. முபாரக் மௌலவி அரப்படித்த அறிக்கைக்கு மன்னிப்புக் கோற வேண்டும்.
ReplyDeleteஹா ஹாஹ்ஹஹா ஹா ஹா ஹ்ஹஹ்ஹா.....
ReplyDeleteனைக்கு அப்பவே லேசா ஒரு டவுட்டு வந்துட்டுது........
எல்லாப் பயலும் முபாரக்கு மவ்லவியைப் புடிச்சு வாங்கு வாங்கெண்டு வாங்கேக்க, யார்ரா இந்த ஆள் aljeziraa lanka எண்டு யோசிச்சனான்...
எழு வருஷமா அண்ணர் மவ்லவியார் "உளறல் மாக் கட்சி" நடத்தியும், சப்போர்ட்டுக்கு ஒரு பயல் கூட இல்லையே அப்பு?
உனக்கு தேங்க்யூ தம்பி shafeek