Header Ads



கபிலவஸ்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால் மிருக பலி வேண்டாம் - மஹிந்த

TM
 
கபிலவஸ்து புனித சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படும் காலப்பகுதியில் மிருகபலியை  மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
 
..........................................................
 
முன்னேஸ்வரம் கோவிலில் மிருக பலி பூஜை நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் முன்னேஸ்வரம் கோவிலுக்கு செல்லவுள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 'எனது ஆதரவாளர்கள் அனைவருடனும் நான் முன்னேஸ்வரத்துக்கு செல்வேன். நீதிமன்ற உத்தரவை யார் கோரினார்கள் எனத் தெரியவில்லை. இந்த உத்தரவை கோரியவர்கள் யார் என்று பார்க்கிறேன். ஏனெனில்  மிருக பலி பூஜையை தடுப்பதற்காகத்தான் உத்தர பெறப்பட்டிருக்க வேண்டுமே தவிர மிருக பலியை மக்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக அல்ல' என அவர் கூறினார்.
 
............................................................................................................................

ஜனாதிபதியின் வேண்டுகோளின் காரணமாக முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி பூஜையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் காளி கோவிலின் பிரதம குருவான சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் முதலாம் திகதி இம்மிருக பலி பூஜை நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
புத்தர்  பெருமானின் கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படும் காலத்தில், மிருக பலி பூஜை வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

3 comments:

  1. துல் ஹஜ் மதம் இறுதிவரை இந்த கபிலவஸ்து நாடகம் அரங்கேறும்

    ReplyDelete
  2. கபில வஸ்து ஹஜ்ஜுப் பெருநாள் விடயத்திலும் மூக்கை நுளைக்குமா?

    நிறுத்தப் பட வேண்டியது 'மிருக பலியா' அல்லது 'உயிர்ப் பலியா'?

    கபில வஸ்து வைக்கப் பட்டுள்ள நாட்களில் உணவுக்காக ஆடு, மாடு, பன்றி, கோழி போன்ற உயிர்கள் பலியிடப் படுவது, மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கொல்லப் படுவது விற்கப் படுவது என அனைத்தையும் தடை செய்து பார்க்கட்டுமே!

    முடிந்தால் இரண்டு மாதத்திற்கு இதனைக் கடைப்பிடித்துப் பார்க்கட்டும்.

    ReplyDelete
  3. இலங்கையில் உள்ள சக இன மதங்களின் உரிமையை மீறும் பௌத்த மத ஜனாதிபதியின் மேலாதிக்கம்!!!!!!!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.