முஸ்லிம் போராளிகளை தாக்க அதிநவீன ஆளில்லா விமானம் - பிரிட்டனின் அறிமுகம்
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் மீது தாக்குதல் நடத்த, உள்ளங்கை அளவில் மிகச் சிறிய ஆளில்லா உளவு விமானம் டிரோனை இங்கிலாந்து ராணுவம் உருவாக்கி உள்ளது. இதை அமெரிக்க படையினர் சோதனை செய்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கய்தா, தலிபான்களை ஒழிக்க, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பல ஆண்டுகளாக முகாமிட்டுள்ளன. இதில் இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டு வீரர்களும் உள்ளனர். இவர்கள் மீது முஸ்லிம் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பலர் பலியாகி உள்ளனர். வீரர்களின் உயிரிழப்பை தடுக்க ஆளில்லா உளவு விமானம் டிரோன்கள் மூலம் நேட்டோ படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளங்கையில் அடங்க கூடிய மிகச் சிறிய டிரோன்களை இங்கிலாந்து ராணுவம் கண்டுபிடித்துள்ளது. 'நேனோ டிரோன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 198 கிராம் மட்டுமே எடை கொண்டது. 2 அதிசக்தி வாய்ந்த கேமராக்கள் உள்ளன.
இதன் மூலம் முஸ்லிம் போராளிகள் பதுங்கி உள்ள இடங்களை கண்டுபிடித்து தாக்குதல் நடத்த முடியும். உலகிலேயே மிகச் சிறிய போர் விமானம் என்று இதை கூறுகின்றனர். இதன் மூலம் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவது எளிது, வீரர்களுக்கு உயிரிழப்பு ஏற்படாது என்று ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். யூ ஒன்லி லிவ் டுவைஸ் என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இதுபோன்ற சிறிய ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
Post a Comment