பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது சிரியா..!
சிரியா அதிபர் பஸருல் அஸதின் ராஜினாமா தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று சிரியா துணை பிரதமர் காதிரி ஜமீல் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால், பஸ்ஸார் ராஜினாமாச் செய்யவேண்டும் என்பதை பேச்சுவார்த்தைக்கு நிபந்தனையாக்க அனுமதிக்க மாட்டோம் என்று காதிரி, ரஷ்ய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
மேலும் காதிரி கூறுகையில், “தேசிய அளவிலான பேச்சுவார்த்தையின் பகுதியாக மட்டுமே பஸ்ஸாரின் ராஜினாமா தொடர்பான விவகாரம் விவாதிக்கப்படும். அதிபரை வெளியேற்ற சிரியா மக்கள் மீது மேற்கத்தியர்கள் அழுத்தம் கொடுப்பது ஆபத்தானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான தந்திரமே பாரக் ஒபாமாவின் சிரியாவுக்கு எதிரான மிரட்டலாகும்” என்று காதிரி ஜமீல் தெரிவித்தார்.
ஆனால், சிரியாவின் பேச்சுவார்த்தை தொடர்பான வாக்குறுதியில் பெரிதாக ஒன்றும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் குற்றம் சாட்டியுள்ளார். சிரியாவுக்கான புதிய ஐ.நா தூதர் லக்தார் இப்ராஹீமியுடனான பேச்சுவார்த்தையில் பஸ்ஸாருல் ஆஸாத்தை ராஜினாமாச் செய்ய வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா நேற்று முன்தினம் தெரிவித்தது.
அதேவேளையில், சிரியாவில் 47 எதிர்ப்பாளர்களை சிரியா ராணுவம் படுகொலைச் செய்துள்ளது. நேற்று காலை கஃபர் ஸுஸாவில் ராணுவம் குண்டுவீச்சை நடத்தியது. 22 டாங்குகளில் ராணுவம் கிராமத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியா விவகாரத்தில் இதுவரை கடைப்பிடித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்த விரும்பவில்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் தலையீட்டை சிரியாவில் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்த லாவ்ரோவ், அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு வழி வகைச்செய்வதுதான் வெளிநாடுகள் சிரியாவில் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

19 ஆயிரம் பேரை படுகொலை செய்துவிட்டு, இப்பொழுது பேச்சுவார்த்தையா? இப்பொழுது அஸாதுக்கு கழிவுக் கால்வாய்களில் ஒளிந்துகொள்ள வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது, இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteசிரியாவில் வெளிநாட்டுத் தலையீட்டை அனுமதிப்பதில்லை என்று சொல்லும் ரஷ்யா மட்டும் சிரியாவுக்கு உள்நாடா? பொதுமக்களை கொன்று குவிக்கும் ஹிஸ்புல்லாக்கள் என்ன உள்நாட்டவரா?
செச்னியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ரஷ்யா செய்யும் அநியாயங்கள் ஊடகங்களில் வருவதில்லை என்பது ரஷ்யாவுக்கு வாய்ப்பாகி விட்டது.