'நான் அல்லாஹ்வை தேர்ந்தெடுத்துள்ளேன்' - ஒரு நடிகையின் வாக்குமூலம்
பிரசித்திப் பெற்ற எகிப்திய திரைப்பட நடிகையான ஹனான் துர்க் நடிப்புத் தொழிலை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
“நானும் இனிப்பும்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் இதனை அறிவித்தார்.
“ஹிஜாபும், நடிப்பும் ஒத்துப்போகுமா? என்பது குறித்து நான் குழப்பத்தில் இருந்தேன். ஆனால், நடிப்புத் தொழிலில் இருந்து விலகி இருப்பதே சிறந்தது என எனக்கு தோன்றுகிறது. நான் அல்லாஹ்வை தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால், நடிப்புத் தொழில் ஹராம் என நான் கருதவில்லை. மத ரீதியான கலை நிகழ்ச்சிகளிலும் இனி நான் பங்கேற்கமாட்டேன்” இவ்வாறு ஹனான் துர்க் தெரிவித்துள்ளார். - தூது
Post a Comment