Header Ads



கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு (படங்கள்)

பாஸி பஹ்ஜான்

மட்டு -கல்குடா தொகுதி ஸ்ரீ.ல.மு.க. தேர்தல் பிரச்சார காரியாலயம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தேர்தல் பிரச்சார காரியாலயம்             02-08-2012 நேற்று மாலை ஓட்டமாவடி, மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்துக்கு முன்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.
                          
இந்த தேர்தல் பிரச்சார காரியாலய திறப்பு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்' கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான ஹாபிஸ் நசீர், நீதியமைச்சரின் ஊடக இனைப்பாளர் டாக்டர் ஹபீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி வேட்பாளர்களான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் ஷாலிஹ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் இஸ்மாயில், சட்டத்தரணி மொஹம்மட் றாஷீக் , முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியச்தர்கள், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள், ஊர் பிரமுகர்கள, பொது மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 







No comments

Powered by Blogger.