Header Ads



சமுர்த்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் திணைக்கள சேவைக்குள் உள்வாங்கப்பட்டவுள்ளனர்

ஹப்றத்

இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்னும் ஒரு மாத காலத்தினுள் திணைக்கள சேவைக்குள் உள்வாங்கப்பட்டவுள்ளதாக இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர்.பி.பந்துல திலகசிறி தெரிவித்தார்.

சமுர்த்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் சமுர்த்தி வங்கி செயற்பாடுகள் தொடர்பாகவும் வங்கிகளை கணனி மயப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயும் முகமாக சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்; நேற்று (04) நடைபெற்ற சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கலந்துறையாடலின் போதே பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் எமது நாட்டின் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ அவர்களினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிபபிடப்;பட்டமைக்கு அமைவாக சமுர்த்தி அதிகாரிகளை பென்ஷன் திட்டத்தின் கீழ் திவிநெகும என்ற புதிய திணைக்களத்தின் கீழ் தமது பணிகளை மேற் கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் சட்டரீதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.
திணைக்கள சேவைக்குள் உள்வாங்குவதற்கான சட்டரீதியான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்ட அமைச்சரவையினதும் அங்கிகாரம் பெறப்பட்டு தற்போது பாராளுமன்றத்தின் அங்கிகாரத்துக்காக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன இன்னம் ஓர் இரு வாரங்களில் அனுமதி கிடைக்கப்பெறவுள்ளது கிடைக்கப் பெற்றதும் இன்னும் ஒருமாத்தினுள் திணைக்கள உத்தியோகத்தர்களாக பணியாற்றவுள்ளீர்கள் என்பதுடன் வங்கிப்பணியாளர்கள் அனைவரும் திவிநெகும வங்கி என்ற வங்கியின் கீழ் செயற்படுவீர்கள் என்ற நல்ல செய்தியினை உங்களுக்கு அறிவிக்குமாறு கோரி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷPல் ராஷபக்ஷவினால் பணிக்கப்பட்டமைக்கு அமைவாகவே நான் அம்பாறை மாவட்டத்துக்கும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் வருகை தந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

மேலும் சமுர்த்தி வங்கிகள், மகாசங்கம் என்பவற்றில் கானப்படும் குறைபாடுக்கள் அதாவது தளபாடக் குறைபாடுகள், கணனிகளை கொள்வனவு செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அதனை உடனடியாக பெற்றுக் கொள்ளக்கூடிய  வகையில் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் உடனடியாக அதிகார சபைக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் இவவாண்டில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனையில் கூடுதலான பணங்களை சேகரித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் சம்மாந்துறைப்பிரதேசத்திலுள்ள நான்கு சமுர்த்தி வங்கிகளுக்கும் சென்று நிலமைகளை நேரில் அறிந்து கொண்டார்.






No comments

Powered by Blogger.