Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய அமெரிக்காவின் ஆர்வம்..!


அமெரிக்க இராதஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்று விரைவில் இலங்கைக்கு  பயணம் மேற்கொள்ளவுள்ளது. கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

றோபேட் ஓ பிளேக் தலைமையிலான அமெரிக்கக் குழு மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போன்றோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய காலமே சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ள போதிலும், இந்தக் குழுவினர் கிழக்கு மாகாணத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறியவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் றோபேட் ஓ பிளேக் ஆர்வம் கொண்டுள்ளதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

4 comments:

  1. அமெரிக்காவுக்கு தேவை மீண்டுமொரு இனக் கலவரம், யுத்தம்.
    அதற்கான வழி எதுவோ அதனையே அவர்கள் நாடுகின்றார்கள்.
    ரவூப் ஹக்கீமும் அதற்கேற்ற விதமாகவே செயல் பட்டும், பேசியும் வருகின்றார்.

    சிங்கள இனவாதிகள் விரும்பாவிட்டாலும் கூட, ரவூப் ஹக்கீம் வலியக் கேட்டு முஸ்லிம்களுக்கு அடி வங்கித் தந்துவிடுவார் போலத்தான் தெரிகின்றது. அமெரிக்காவுக்கும் அதுதானே தேவை.

    ReplyDelete
  2. புலிகளுக்கு அரசியல் பலம் அளித்து உள்ளதால் புலிகளை தார்மீக ஆதரவளித்து போசித்த கூட்டமைபுடனும் உலக முஸ்லிம்களின் எதிரி அமெரிக்காவுடனும் கைகோர்த்து கூடிகுழாவ எங்கட ரஃஊப் ஹகீம் காக்காக்கு போடுங்க வாக்கு உணர்சி,கிழர்ச்சி,அரபு வசந்தம்,மக்கள் எழுச்சி என்டு உசுபேத்தி திரிகிறார் கண்டிப்பாபோடுங்க வாக்கு அப்புரம் முஸ்லிம் விரோத சக்திகளுக்கு கூட்டி கொடுத்து நம்ம தலைக்கு ஆப்பும் வைபார் போடுங்க வாக்கு

    ReplyDelete
  3. ungalukkallam waitharecheal, appadei eanral awerum oru muslim thanie awerum serthuthanie kalawaraththiel aliwar???

    ReplyDelete
  4. தலைவர்கள் எங்கே அழிகின்றார்கள்?
    இங்கிலாந்துக்கு குடும்ப விடுமுறை கழிக்க போய் விடுவார்கள்.

    1983 கலவரத்தில் அமிர்தலிங்கமும், நவரத்னமும், யோகேஸ்வரனும், துறைரத்னமும், பிரபாகரனும் அழிந்தார்களா, இல்லை அப்பாவி தமிழர்கள் அழிந்தார்களா?

    ReplyDelete

Powered by Blogger.