Header Ads



றிசானா விவகாரம் தொடருகிறது (கடிதம் இணைப்பு)

 
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நாபீக்கை விடுதலை செய்வதில் இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டத் தவறியுள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாபீக்கை விடுதலை செய்வதற்கான மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதற்கு தேவையான சட்டத்தரணி கட்டணங்களை அரசாங்கம் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

ரிசானாவை விடுதலை செய்வதற்கான முனைப்புக்களுக்காக ஆசிய மனித தமது அமைப்பு நிதி திரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது.

அளவில் சிறியது என்ற போதிலும் இலங்கையும் உலக அரங்கில் ஓர் இறைமையுடைய நாடு என மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஏனைய நாடுகளைப் போன்றே தனது நாட்டுப் பிரஜைகளை பாதுகாப்பதற்கு இலங்கையும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக உறவுகளோ அல்லது ராஜதந்திர உறவுகளோ பாதிக்கப்படும் என இலங்கை கருதக்கூடாது என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ரிசானா நாபீக்கை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். ரிசானாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி அரேபிய மன்னரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகமும் பல்வேறு வழிகளில் ரிசானாவை விடுதலை செய்ய இராஜதந்திர முனைப்புக்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். gtn
 
 
ஏசியன் ரிபியூன் இணையத்தில் 2011 - 06 -16 அன்று அன்று வெளியாகியிருந்த சகோதரி றிசான நபீக் எழுதிய கடிதமொன்றையும் இங்கு தருகிறோம்.
 

 

No comments

Powered by Blogger.