பள்ளிவாசல்களை பூட்டு போடும் அரசுக்கு வாக்களிப்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்
அப்துல்சலாம் யாசீம்
மரச்சின்னத்துக்கு வாக்களிப்பது வெற்றிலைச்சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு சமமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை வேட்பாளர் நசுறுல்லாஹ் மொறவௌ தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதும், மற்றைய மாகாணங்களில் அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுவதும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை ஏமாற்றும் செயலாகும். இது முஸ்லிம் காங்கிரஸ் செய்யும் விநோத விளையாட்டாகும்.
முஸ்லிம்களின் புனித இடமான பள்ளி வாயல்களை உடைப்பதற்கும், பூட்டு போடுவதற்கும் மௌனம் சாதிக்கும் அரசாங்கத்துக்கு வாக்களிப்பதும், அதனுடன் முட்டு கொடுத்து இணைந்து போகும் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பது பற்றி கிழக்கு மாகாண மக்கள் சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை விடவும், பள்ளி வாயல்களை உடைக்கும் செயல்களே அதிகமாக பத்திரிகைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றது. இதுதானா அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம்? தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி வீதிக்கு காபெட் போடுவதைக்கண்டு ஏமாந்து விடாமல் எதிர்கால சிறார்களின் நலன் கருதி வாக்களிக்க வேண்டும்.
அத்துடன் வெற்றிலைச்சின்னத்துக்கும், மரச்சின்னத்துக்கும் அழிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் முஸ்லிம் சமூகத்துக்கு தேர்தல் முடிந்த பின் செய்யப்படும் அநியாயங்களுக்கும், பள்ளிகளை உடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும் எனவும் தெரிவித்தார்.
எனவே கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்று, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது எனவும் வேட்பாளர் நசுறுல்லாஹ குறிப்பிட்டார்.
UNP கரன்களையும் ஸ்ரீலங்கா கரங்களையும் நம்ப வேண்டாம்,எல்லாம் பச்ச கள்ளன்கள் தான்.
ReplyDeleteSLMC most evil than the BOTH
ReplyDelete