உயர் கல்வி அமைச்சர் + கல்வி அமைச்சரை பதவி நீக்க ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிப்பு
உயர் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக் கோரி ஒரு இலட்சத்திற்கு அதிகமான கையெழுத்துக்களைப் பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இஸட் புள்ளி தொடர்பிலான சர்ச்சைக்குக் காரணமான உயர்கல்வி அமைச்சர் ௭ஸ்.பி.திஸாநாயக்கவையும், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவையும் பதவியிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி பொதுமக்களிடமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகளை இலங்கை ஆசிரியர் சங்கம் பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், இரத்தினபுரியில் இருந்து குருணாகல், கம்பஹா மற்றும் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.
மேலும் பல மாவட்டங்களில் தொடர்ந்தும் கையெழுத்துக்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2011 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் படி வெளியிடப்பட்ட இஸட் புள்ளி தொடர்பிலான சர்ச்சை தொடர்ந்தும் உள்ளது. அதற்கான தீர்வு இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை.
இதனால் கடந்த ஆண்டு புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு ஏற்ப பரீட்சைக்குத் தேற்றிய மாணவர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களால் உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றில் முறைப்பாடுகளையும் பதிவு செய்து கொண்டனர். இதனடிப்படையில் அண்மையில் பழைய இசட் புள்ளியைத் தடை செய்வதுடன் புதிய இசட் புள்ளியினை வெளியிடுமாறும் உயர் நீதிமனறம் உத்தரவிட்டது.
இதனாலும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இக் குளறுபடிகள் ஏற்பட காரணமான அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்க பொதுமக்களிடம் இருந்து கையெழுத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இவர்களைப் பதவி நீக்கினால் மட்டும் போதாது. இவர்கள் அரசியலுக்கு வந்த பின்னர் சம்பாதித்த அனைத்துச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப் பட வேண்டும்.
ReplyDeleteஇவர்களுக்கு G.C.E (O/L) பரீட்ச்சைக்குத் தோற்றி, 6 பாடங்களில் சித்தியடையுமாறு தண்டனை வழங்கப் பட வேண்டும். இவர்களின் அறிவைப் பொறுத்தவரை அதைவிடப் பெரிய அவமானமும், கொடூரமான தண்டனையும் வேறு இருக்க முடியாது.