Header Ads



ஒலுவில் கடலில் மூழ்கி மாணவன் வபாத் (படம் இணைப்பு)

 
 
AD
 
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் நான்குபேர் ஒலுவில் கடலில் குளிக்கச் சென்றதில் ஒரு மாணவன் கடலில் மூழ்கி சடலமாக இன்று (23) மீட்கப்பட்டுள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
நேற்று (21) இடம் பெற்ற இத்துயரச் சம்பவத்தினால் ஒலுவில் பிரதேசத்ததைச் சேர்ந்த அஸ்ரப் இஹ்ஜாஸ் முபாரக் (வயது19) என்ற மாணவனே மரணமடைந்துள்ளார்.
 
பழைய தபாலக வீதி, ஒலவில்- 02ம் பிரிவில் வசித்து வந்த இம்மாணவன் கல்வி பொதுத்தராதர உயர்தர விஞ்ஞானப் பிரிவில் மருதமுனையில் கல்வி கற்று, இம்முறை நடைபற்று வரும் பரீட்சையினயும் உழுதியுள்ளார்.
 
ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் இம்மாணவர்கள் நான்குபோரும் கடலில் நீராடிய வேளை கடலலை மூலம் இழத்துச் செல்லப்பட்டதை அங்கிருந்த மீனவர்களும், பொதுமக்களும் கண்டுள்ளனர்.
 
இதனையடுத்து மீன்பிடி போட் ஒன்றின் மூலம் சென்ற மீனவர்கள் மூன்று மாணவர்களை காப்பாற்றியதில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
 
மரணமடைந்த ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இம்மாணவன் கல்வியில் அதீத அக்கரையும், திறமையும் காட்டிவந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவரின் மறைவு குறித்து அம்பாறை கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் பெரும் திரளாக ஒலுவில் பிரதேசத்தில் ஜனாசாவை பார்வையிட்டு வருவதுடன் ஒலுவில் பிரதேசமெங்கும் பெரும் சோகமாகவே காணப்படுகிறது.

No comments

Powered by Blogger.