Header Ads



இப்தார் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

அஸ்ரோ இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் முன்மாதிரியான செயற்பாட்டினை பாராட்டி பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரும், அஸ்ரோ அமைப்பின் ஆலோசகருமான எம்.எஸ்.முபாறக் ஆசிரியரினால் 2012-07-31 ம் திகதி அன்று இப்ஃதார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது இந்நிகழ்வில் அமைப்பின் ஏனைய ஆலேசகர்களான பி.எம்.எம்.முகைடீன், எஸ்.அப்துல் றஹீம் மற்றும் ஒழுக்காற்றுக்குழுவின் சிரேஸ்ட உறுப்பினரும் சபீலுர்ரஸாத் அறபுக்கல்லூரியின் அதிபருமான மௌலவி எம்.அப்துல் கையூம் ஆகியோர் பங்குபற்றினர் கௌரவ அதிதியாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். வாசித் கலந்துகொண்டார்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினறும் அஸ்ரோ அமைப்பின் ஆலோசகருமான எம்.எஸ்.முபாறக் ஆசிரியர் உரையாற்றும்போது,

அஸ்ரோ இஸ்லாமிய இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மியன்மார் முஸ்லிம்களுக்கான ஜனாஸாத்தொழுகையானது முழு உலக முஸ்லிம் இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியான செயற்பாடென்றும் சோர்ந்து போய் சோம்பேறிகளாக இருக்கும் இக்கால இளைஞர்களுக்கு புதுத்தெம்பூட்டக்கூடிய வகையில் இதன் செயற்பாடுகள் இருப்பதாகவும் இவ்வாறானதொரு சமூக மறுமலர்ச்சி அமைப்பொன்றில் தான் ஆலோசகராக இருப்பதில் பெருமிதம் அடைவதாகவும் தான் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து கௌரவ அதிதியாக கலந்துகொண்ட பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். வாசித் உரையாற்றுகையில்.

பொத்துவில் மண்ணில் பல்வேறு வகையான அமைப்புக்கள் தோன்றி மறைந்திறுக்கின்றன ஆனால் அவற்றின் செயற்பாடுகளில் சொல்லும் படியாக எதுவும் இல்லை ஆனால் அஸ்ரோ அமைப்பானது குறுகிய காலத்தில் ஒரு சிறந்த செயற்பாடொன்றை முழு சமூகத்திற்கும் முன்மாதிரியாக செய்துகாட்டியுள்ளது இதன் செயற்பாடுகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கையில் எதிர்காலத்தில் இந்த அஸ்ரோ அமைப்பானது பொத்துவிலின் ஒரு தீர்மான சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஒரு துளியேனும் சந்தேகம் இல்லையெனவும் இனிவரும் காலங்களில் அஸ்ரோ அமைப்புக்காக சகல உதவிகளையும் தான் செய்து தர தயார் எனவும் தெரிவித்தார். 





 

No comments

Powered by Blogger.