Header Ads



பஷீர் பேச்சின் எதிரொலி - மட்டக்களப்பு விரைகிறார் ரவூப் ஹக்கீம்


'வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் தங்களின் விருப்பத் தெரிவை அலிசாஹிர் மௌலானாவிற்கு அளிக்கவேண்டும்' என முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், பிரதியமைச்ருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று செவ்வாய்கிழமை இரவு ஓட்டமாவடி செல்லவுள்ளதாக அறியவருகிறது. தற்போது அவர் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள நிலையில், ஹபீஸ் நசீர் அஹ்மத் இன்று காலையில் ரவூப் ஹக்கீமை அங்கு சென்று சந்தித்ததாக  முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரவூப் ஹக்கீமுக்கு நெருக்கமான வட்டாரங்கள் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தன.

ரவூப் ஹக்கீம் - ஹபீஸ் நசீர் அஹ்மத் சந்திப்பின்போது ''வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் தங்களின் விருப்பத் தெரிவை அலிசாஹிர் மௌலானாவிற்கு அளிக்கவேண்டும்'' என பஷீர் சேகுதாவூத் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கூட்டமொன்றில் கூறியிருப்பது குறித்து ஆராயப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்டுகிறது.

நேற்று ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நடைபெற்ற “மக்கள் எனும் நீதிபதிகள் முன்னிலையில் பஷீரின் வாக்குமூலம்” என்ற தலைப்பில் பஷீர் சேகுதாவூத் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்..!
நன்றி - KM

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்.

எனது 33 வருட அரசியல் வாழ்க்கையில் ஏறாவூரை பிரித்தவன் என்ற வடுவை நான் விட்டுச்செல்ல விரும்பவில்லை. எனது மக்களை நான் ஒற்றுமைப்படுத்திப் பார்க்க விரும்புகின்றேன். இதற்காக நான் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன். சகோதர் அலிசாஹிர் மௌலானாவும் நானும் ஏறாவூரில் பெரு அரசியல் தலைமைத்துவத்தை வகித்துவந்த போது ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட முருகல் நிலையால் பக்கத்து வீட்டில் நல்லது நடந்தலும் சரி, கெட்டது நடந்தலும் சரி ஒருவர் ஒருவரின் முகம்பார்க்காது வாழ்ந்து வருகின்றனர். இந்நிலை மாறவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

சகோதர் அலிசாஹிர் மௌலானாவிடம் பல முறை பேச்சுவார்த்தை நடாத்தி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவில் களமிறங்குமாறும் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் பூரண சம்மதத்தைத் தெரிவித்தார்கள். அதற்காக அவர் சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியை மட்டுமல்ல நகர சபையின் தவிசாளர் பதவியையும் விட்டெறிந்து வரவும் தயாராக இருந்தார். ஒரேயடியாக எல்லாவற்றையும் இழந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் மௌலானா இணைவதை நான் விரும்பவில்லை. அவரின் எதிர்காலம் பற்றி தீர்க்கமாக சிந்தித்து அவரை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக களமிறங்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதென்ற முடிவில் இருந்தது. அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று சீட்டுகள் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கும். கல்குடாவிற்கு ஒன்று, ஏறாவூரிற்கு ஒன்று, காத்தான்குடிக்கு ஒன்று என்று வழங்கப்படும் முஸ்லிம் காங்கிரஸின் சீட்டில் ஏறாவூரிற்கு நான் யாரையும் களமிறக்கமாட்டேன் என்று அலிசாஹிர் மௌலானாவிடம் சொன்னேன். அதற்கு பதிலாக மௌலானாவை வெற்றியடைய நான் முழு மூச்சாக நின்று உழைப்பதாகவும் வாக்குறிதி அழித்தேன்.

சுதந்திர கட்சி வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட தன்னை அழைப்பதாக மௌலானா என்னிடம் சொன்ன போது கையொப்பமிடுமாறு நான் கூறினேன். இறுதியில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை எடுத்ததும் நாங்கள் அரசியல் வியூகம் அமைத்தது கேள்விக்குள்ளாகிப் போய்விட்டது. மௌலானா என்ன செய்வது பசீர் என்று என்னிடம் கேட்டார். டிபெக்ஸினால் அழித்துவிட்டு வாருங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்வேன் என்று சொன்னேன். சற்றுயோசித்த பின்னர் அவரைத் தொடர்பு கொண்டு தாங்கள் அக்கட்சியிலே போட்டியிடுங்கள் என்று சொல்லவேண்டிய துரதிஸ்டத்திற்கு நான் ஆளானேன். எவ்வளவோ அரசியல் வியூகம் வரைந்தும் அவர் அன்று கையொப்பமிடக் கேட்டபோது அல்லாஹ் என் கண்ணை மறைந்துவிட்டான் என்று உங்கள் முன் சாட்சியம் சொல்கின்றேன்.

ஏறாவூரை ஒற்றுமைப்படுத்த இரு அரசியலை ஒன்றாக்கவே செய்வேனே தவிர மூன்றாக்க நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.

முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப் படுத்த வேண்டும் என்ற ஆதங்கம் இவ்வாறு என்னை செயல்பட தூண்டியது. நான் இரண்டு தலைவர்களின் பாசறையில் வளர்ந்தவன். தலைவர் அஸ்ரப் அவர்களின் தியாகம், தன்னை ஈன்று கட்சியை வளர்த்த அம்மனிதர் கண்ட கனவு, முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்து இந்நாட்டில் உயர்வடையவேண்டும் என்பதே. நாட்டின் பிரதமராக ஒரு முஸ்லிம் இருக்கவேண்டும் என்பதற்காக அவர் இறுதிவரை போராடினார். வரலாற்றில் முஸ்லிம்கள் தடம்பதிக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக வியூகம் வரைந்தார்.

அதன்வழியில் வந்தவன் இந்த சேகுதாவூதின் மகன். முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை கிழக்கு மாகாண சபையில் வைத்து அலங்கரிக்கப் பார்க்கின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அந்தஸ்து உயர்வடைய வேண்டுமானால் இதை நாம் சாதித்துக் காட்டவேண்டும். பசீரின் இறுதி மூச்சு இருக்குமட்டும் முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவை விட்டகழமாட்டேன்.

இதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த நான் கங்கணம்கட்டியலைவேன் என்று உங்கள் முன் சாட்சியம் பகர்கின்றேன்.

எங்களது கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களுக்குச் சொல்லும் செய்தி இதுதான், நாங்கள் அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கின்றோமே தவிர எங்களது கட்சியை விட்டுப்பிரிந்து ஆளுக்கொரு கட்சியை உருவாக்கிக் கொண்டவர்களுடன் பங்காளியாக இல்லை என்று கூறினார்.


4 comments:

  1. ஒருவேளை ஹாபிஸ் நசீர் மு.கா உக்குள் உள்வாங்கப்படமை இவரின் எதிர்கால அரசியல் செல்வாக்கை கேள்விக்குறியாக்கும் என்ற ஐயத்தில் உளறினாரோ?.

    ReplyDelete
  2. என்னடா முஸ்லீம் காங்கிரசுக்குள் கச முசா ஒன்றையும் காண வில்லையே என நினைத்திருந்தோம்.
    தவிசாளரின் வடிவில் வந்திருக்குது போல தேர்தலில் தோல்வியடையும் போதெல்லாம் தவிசுக்கு பாராளுமன்றம் போக வழி கிடைப்பது முஸ்லீம் காங்கிரசில் தான் வெளியே சென்றுவிடாதீர்கள் பிறகு அம்போதான்.
    புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்தது போல் முஸ்லீம் காங்கிரசில் இருந்து தவிசை பிரிக்க மௌலானா ஏதோ தந்திரம் செய்துள்ளார் போலும்
    முஸ்லீம் காங்கிரஸ் பல தவிசுகளை இழந்துள்ள போதும் அந்தக்கட்சி வீழ்ந்து விடவில்லை மாறாக இன்னும் பலமடைந்தே வந்துள்ளது.
    இதனை முற்பது வருட அரசியல் அனுபவமுடைய அதுவும் ஒரு விடுதலை அமைப்பின் உளவுப்பிரிவில் தலைவராக இருந்த தவிசு நன்றாக அறியும்.

    மௌலானாவை தோற்கடிக்க இங்கு ஏதோ சூழ்ச்சி நடக்குது போல் தெரிகிறது.
    தலைவரே, வேறு திசைக்கு சென்றாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் பள்ளி வாசல்களை அசிங்கப்படுத்தும் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க அக்கரைப்பற்றில் ஒருவர் கூறுகிறார் நாயகம் அவர்களின் காலத்திலும் பள்ளிகள் உடைக்கப்பட்டதாம். சிவப்பு தொப்பி போட்ட கிழட்டுக்குரங்கு ஒன்று கூறுகிறது பள்ளிகளில் எதுவும் நடக்கவில்லை என்று.......

    எல்லாவற்றுக்கும் அடுத்த எட்டில் மக்கள் பதிலளிப்பார்

    தவிசு நீங்கள் உங்களது தலையில் மன்னைப்போட்டுக்கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  3. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டயிட்டால் ஜவாகிர் சாலி,ஹபிஸ் நசீர்,லெப்பை ஹாஜி,ஹிஸ்புல்லாஹ்,அமீர் அலி,அலி சாஹிர் மௌலானா போன்றோர்களில் மூவரே தெரிவாவர், இவர் தோல்வியை சந்திப்பார் என்பது அவருக்கு நன்றாகத்தெரியும்,அதனால் இப்போதிருந்தே அரசுக்கு ஆதரவாக இயங்கினால் மாகான சபை தேர்தலின் பின் இடம்பெறும் புதிய அமைச்சரவையில் ஒரு முழு அமைச்சைப்பெற்றுக்கொள்ளலாம் அத்தோடு அடுத்த பொதுத்தேர்தலில் அரசுக்காக பாடுபட்டால் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்று விடலாம் என்றெல்லாம் கணக்குப்போட்டு இந்த முடிவுக்கு வந்துள்ளார்

    ReplyDelete
  4. innum 5000 vaakukal maarinaal. muslim congressku Batticaloavil moodu vilaathaan enpathai yaarum unaravillaiyaaa ???.

    ReplyDelete

Powered by Blogger.