Header Ads



இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் தொன் அரிசி துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி



எம். எஸ். பாஹிம்
 
ஒரு இலட்சம் தொன் அரிசியை துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதுவரை 500 கொள்கலன்களில் அரிசி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
 
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாகவே இந்தளவு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மேலும் பல நாடுகள் இலங்கையில் இருந்து அரிசியை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,
 
2 மாதத்தினுள் 4 ஆயிரம் கொள்கலன்களில் அரிசி அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், அரிசி ஆலைகளில் போதுமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில் துரிதமாக அவற்றை வழங்க முடியவில்லை. இதனால் அரிசி ஆலைகள் நவீன தொழில் நுட்பங்களுடன் முன்னேற்றப்பட்டுள்ளன.
 
TN

No comments

Powered by Blogger.