மியன்மார் முஸ்லிம்களுக்கான மருத்துவ உதவியை நிறுத்தியது பங்களாதேஷ்
மியான்மர் நாட்டில், ரகின் மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தால், தங்கள் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளுக்கு மருத்துவ உதவிகளை நிறுத்தும் படி வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் நாட்டில், வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரகின் மாகாணத்தில், கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது. இதையடுத்து, மவுங்தா பகுதியில், அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, ஏராளமான முஸ்லிம்கள், தங்கள் தாயகமான வங்கதேசத்துக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அகதிகள் வந்த வண்ணம் உள்ளதால் அவர்களை எல்லையோர காவல் படையினர் விரட்டியடித்து வருகின்றனர். வங்கதேசத்தின் காக்ஸ்பஜார் பகுதியில் ஏராளமான மியான்மர் அகதிகள் உள்ளனர். இவர்களுக்கு சர்வதேச தொண்டு அமைப்புகள் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவற்றை அளித்து வருகின்றன.
வங்கதேச அரசின் இந்த செயலை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முஸ்லிம் நாடாக இருந்தும், விபச்சாரத்தை இதுவரை தடை செய்யாத வங்கதேசம், இவ்வாறன செயல்பாடுகளை தொடர்ந்தும் செய்து அல்லாஹ்வின் தண்டனையை விரும்பி அழைக்கின்றதோ என அஞ்சுகின்றேன்.
ReplyDelete