Header Ads



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தாராளமாக விட்டுக்கொடுத்து செயற்பட தயார் - சம்பந்தன்

 
TM
 
சி.குருநாதன்
 
 'ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சர்வதேச பங்களிப்புடன் காணப்படும் அரசியல் தீர்வு முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
 
 திருகோணமலை, பெரியகுளம் என்னுமிடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
 
'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்க வேண்டும்.
 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க நாம் தயாராக இருக்கின்றோம். தாராளமாக விட்டுக்கொடுத்து செயல்படுவதற்கு நாம் தயாராகவும் உள்ளோம்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்க வேண்டும். நீதிக்காக போராடும் நாம் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டோம்' என்றும் சமபந்தன் தெரிவித்தார்.

5 comments:

  1. r u ready to give chief minister for SLMC?

    ReplyDelete
  2. r u ready to give chief minister for SLMC?

    ReplyDelete
  3. நல்லாத்தான் இருக்கு, நம்பலாமா?

    ReplyDelete
  4. சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்படிப் பேசிப் பேசியே முஸ்லிம் காங்கிரசுக்கு குழி வெட்டுகின்றனர்.

    'முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம், முஸ்லிம் காங்கிரசுக்கும் எமக்கும் இடையில் நெருங்கிய உறவு இருக்கின்றது'
    போன்ற பேச்சுக்களெல்லாம் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவே உதவப் போகின்றன.

    ReplyDelete
  5. Sathikaarakkumbalai nambaatheerkal ivarkal kayyil iraththkkarai we like real peace not Tamil terrorism MANOR GANESH IS ALSO ANTI MUSLIM TERRORIST AND WE SHULD GIVE HIM GOOD MENTAL TREATMENT LOOK AT SIVAJILINGAM HOWMANY TIME ARRESTED AND HUMILIATED EVEN WAS MP NO SHARE WITH PULI AGEND

    ReplyDelete

Powered by Blogger.