Header Ads



தேசாபிமானி என்று முழங்கியவர்களே நாட்டின் வளத்தை சூறையாடினர் - சரத் பொன்சேக்கா

மொஹமட் ஹபீஸ்

உலகில் தோன்றி அனைத்து சர்வாதிகாரிகளும் தான் தேசாபிமானி என்றே முழங்கினர். ஆனால் அவர்கள் அனைவருமே தமது சர்வ அதிகாரங்களையும் பயன்படுத்தி நாட்டின் வளங்களைச் சூறையாடினர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் கலேவெல பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் தேசப் பற்றாளர்களுக்கும் தேசத் துரோகிகளுக்கும் புதுவகை வரைவிலக்கணம் வழங்கப் படுகிறது. உதாரணத்திற்கு இலங்கை தேசிய றகர் அணிக்கு முதலாவது வருடம் விளையாடும் ஒருவருக்கு கெப்டனாக நியமனம் வழங்கப்பட்டது. ஐந்து ஆறு வருடங்களாக விளையாடும் வீரர்கள் இதனால் அத்தலைமையில் விளையாட முடியாது என்றனர். ஈற்றில் என்ன நடந்தது. ஆதனை மறுத்த கண்டி அணியைச் சேர்ந்த வீரர்கள் தேசத் துரோகி எனப்பட்டனர். விளையாடியவர்கள் தேசாபி மானிகளாக்கப்பட்டனர். இப்படி எமது அரசிசயல் எல்லாவற்றிலும் விளையாடுகிறது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்தன சில்வா இங்கு தெரிவித்ததாவது,

இலங்கை ஏற்கனவே பெற்ற கடன் களுக்கு வட்டியும் முதலுமாக பணம் செலுத்தவேண்டிய காலம் 2012ம் ஆண்டாகும். அதனை மீளச் செலுத்த நாம் மீண்டும் கடன் பெற்றுள்ளோம் கடன் பெற்று கடன் அடைக்கும் ஒருநாடாக நாம் மாறியுள்ளோம். வெகுவிரைவில் அளவுக்கதிகமான கடன் பெற்று சீனாவிற்கு நாம் அடிமையாகும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்றார்.இன்னும் பலர் உரையாற்றினர்.


No comments

Powered by Blogger.