Header Ads



தொடரும் பெர்முடா மர்மம்

 
ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆமெரிக்கா கண்டங்களுக்கு இடையே அட்லாண்டிக் கடலில் பெர்முடா டிரையாங்கிள் என்ற மர்ம கடல் பகுதி உள்ளது.
 
இது மியாமி, பெர்முடா மற்றும் பெட்ரோரிகோ பகுதிகளை உள்ளடக்கியது. பெர்முடா பகுதிக்குள் பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் திடீரென மாயமாகி வருகின்றன. இங்கு அவை உள்ளிழுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
 
அப்பகுதியில் பறக்கும் பறவைகளும் காணாமல் போகின்றன. ஏனெனில் இங்கு அளவுக்கு அதிகமான பேய் மழை, சூரிய சக்தியின் தாக்கம் மற்றும் ஈர்ப்பு விசையும் காரணம் என கருதப்படுகிறது.
 
இங்கிலாந்தில் புறாக்கள் பறக்கவிடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் இருந்து புறா போட்டியாளர்கள் திர்ஸ்க், வெதர்பி, கான்செட் ஆகிய பகுதிகளில் இருந்து 232 புறாக்களை பறக்க விட்டனர். ஆனால், அவற்றில் 13 புறாக்கள் மட்டுமே திரும்பி வந்தன. மற்றவை மாயமாகி விட்டன.
 
எனவே, காணாமல் போன புறாக்கள் பெர்முடா பகுதியில் கடலுக்குள் உள்ளே இழுக்கப்பட்டிருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நீண்டதூரம் பறக்க முடியாமல் பல புறாக்கள் கடலுக்குள் விழுந்து இறந்து இருக்கலாம் அல்லது வேறு இடங்களில் தங்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனவே பெர்முடா பற்றிய மர்மங்கள் இன்னும் தொடர்கிறது.

1 comment:

  1. BROTHER Bemuda AFRICA VUKKU Kidda illa athu vanthu SOUTH AMERICA VIlathaan orukka ATLAS PAARUNKAL

    ReplyDelete

Powered by Blogger.