பல்கழைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர்களும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்
நாட்டில் பாமர மக்கள் மட்டுமல்லாது பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மேலதிக செயலாளர் நிமால் கொடவெல தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வித்துறையோ அல்லது உயர்கல்வி நிறுவனமான பல்கலைக்கழகமோ ஒழுக்கக் கல்வியை போதிக்காது வெறுமனே பாடத்திட்டத்தை மட்டும் போதிப்பதால் பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்றவர்கள் கூட பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணமோசடி, கடத்தல் உட்பட பாரிய குற்றச்செயல்களிலும், சமூக விரோத செயல்களிலும் இவர்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாகவும் அவ்வகையில் கடந்த ஆண்டு பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 284 பட்டதாரிகள் சிறைத்தண்டனை அனுபவித்தாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேநேரம், சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்கள் உயர்கல்வியையோ அல்லது தொழில்பயிற்சியையோ பெற விரும்பினால் அதற்கு சிறைச்சாலை புனர்வாழ்வு திணைக்களம் ஏற்பாட்டை செய்யும் எனவும் எமது நாட்டின் சட்டத்தில் குற்றம் புரிந்து தண்டனை பெற்ற ஒருவர் அரச தொழில் ஒன்றைப் பெற தகுதி அற்றவராவார் எனவும் தெரிவித்துள்ளார்.

”அல்லாஹ் வழங்கிய இரு அறிவுகள்” என்ற தலைப்பில் ஜமாஅத்துல் இஸ்லாமியின் அமீர் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் உரை ஒன்றைக் கேட்டிருக்கின்றேன். அதில் இந்தப் பிரச்சினைக்குரிய காரணம் அலசப்பட்டுள்ளது.
ReplyDelete