ஐவேளை தொழுகை சமூக ஒற்றுமைக்கு பங்கம் - புத்த சாசன அமைச்சு கண்டுபிடித்தது
தெஹிவளை தாருல் அக்ரம் என்ற இடத்தில் இயங்கும் ஹிப்ளு மத்ரஸாவில் ஐவேளை தொழுகை நடைபெறுவது சமூக ஒற்றுமைக்கு கேடாக அமைந்துள்ளதாக புத்த சாசன அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
புத்த சாசன அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் நவவி மூலமாக தாருல் அக்ரம் நிர்வாகத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குர் ஆன் மத்தரஸாவில் முஸ்லிம்கள் தொழுகைக்கு கூடுகின்றனர். இது சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கிறது. அருகில் ஏனைய முஸ்லிம் பள்ளிவாசல்கள் உள்ளன. அவ்வாறான பள்ளிவாசல்களுக்குச் செல்லாமல் முஸ்லிம்கள் இந்த மத்ரஸாவில் தொழுகைக்காக கூடுவது உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த ஹிப்ளு மத்ரஸா சிங்கள கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தலையடுத்து சில காலம் மூடப்பட்டிருந்ததாகவும், பின்னர் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கொண்ட முயற்சி காரணமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில' குறித்த மத்ரஸாவுக்குச் சென்றிருந்த பைஸர் முஸ்தபாவும், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் மகனும் அங்கு தொழுகையை நிறைவேற்றி தொழுகைகள் மீண்டும் ஆரம்பிக்க உதவி புரிந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது தாருல் அக்ரம் மத்ரஸாவில் தொழுகை நடாத்த பௌத்த சாசன அமைச்சு தடை விதித்துள்ளமையும், அங்கு தொழுகை நடாத்துவது சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்துமென வர்ணித்துள்ளமையும் முஸ்லிம் சமூகத்தை கொதிப்படையச் செய்துள்ளது.
நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடிய வேளையில்தான் பௌத்த சாசன அமைச்சு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய பெருநாள் பரிசு இதுவெனவும் முஸ்லிம்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இனவாதம் தங்களிடம் இல்லை என்று கூறும் அரசு வாய்திறந்துள்ளதா?
ReplyDeleteஅல்லது அரசுக்கு ஒத்து ஊதும் அதாவுல்லா,அஸ்வர்,ரிசாத்,பைசர் முஸ்தபா,ஹிஸ்புல்லாஹ் ஒன்றோர் என்ன சொல்ல வருகின்றார்கள்
இவர்கள் இவர்களது பதவிகளை காத்துக்கொள்வதற்காக பச்சோந்திகளாக முஸ்லீம்களின்வாக்குகளை தாரை வாக்கதுடிக்கின்றாகள் அல்லாஹ் நிட்சய இவர்களை மன்னிக்க மாட்டான்
ஆகவே கிழக்கு மாகாணத் தேர்தலில் அனைத்து முஸ்லிம்களும் UPFA யின் முகவர்களுக்கு வாக்களித்து நாட்டில் உள்ள பள்ளிவாயல்கள் மதரசாக்கள் அரபு கல்லூரிகள் என்பவற்றை மூடுவதற்கு முழு அங்கீகாரத்தையும் வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
ReplyDeleteஐவேளை தொழுவதைத் தடுக்க இப்படியும் ஒரு காரணமா என்று ஆச்சரியப் படுகையில், <<<< "ஒற்றுமைக்குப் பங்கம்", "ஒற்றுமைக்குப் பங்கம்" >>>> ............இது எங்கேயோ அடிக்கடி கேட்ட கோசமாக இருக்கின்றதே என்று சிந்தித்துப் பார்த்தால்.......!!
ReplyDeleteஇந்தக் காரணத்தைச் சொல்லித்தானே நமது சமூகத்திலும், பள்ளிகளிலும் நபி வழியை சொல்பவர்களைப் புறக்கணித்தனர், சுன்னாவை நிராகரித்தனர், பித்அத்துக்களை ஆதரித்தனர், இப்பொழுது சிலை வணங்கும் சிர்க்குக்காரன் , நம்மவர்கள் சத்தியத்தை மறைப்பதற்காக சொன்ன அதே காரணத்தைச் சொல்லி, அல்லாஹ்வையே தொழாதே என்கின்றான், எப்படி இருக்கின்றது இது?
இப்பொழுது 'இந்த விடயத்தில் முஸ்லிம்கள் ஒன்று படு செயல்பட வேண்டும்' என்று வேண்டுகோள்களும், அறிக்கைகளும் வெளிவரும். ஆனால் முஸ்லிம்கள் எதனது அடிப்படையில் ஒன்றுபட வேண்டுமோ, அந்த தூய குர்ஆன் சுன்னாவைப் பற்றி பேச்சே இருக்காது.
தெஹிவளையில் உள்ள மேற்படி ஸ்தானத்தில் ஐவேளை தொழுகை நடாத்துவதற்கான அனுமதி முறைப்படி பெறப்பட்டு இருக்குமேயானால், விட்டுக் கொடுக்காமல் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்.
நாடு முழுக்க இருக்கும் மதுபானத் தவறணைகள் பௌத்த நாட்டின் அவமானச் சின்னங்கள் இல்லையா?
ReplyDeleteஇதில் போதை ஏற்றிக் கொள்பவர்கள் சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கவில்லையா?
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அரசாங்கத்தின் அடிவருடிகளே! எட்டப்பன்களே! உங்கள் எஜமான விசுவாசம் மௌனம் கலைக்கத் தடுக்கின்றதா?
எங்கே அஸ்வர்? எங்கே பைஸர் முஸ்தபா? எங்கே மற்றவர்கள்?
இத்தகைய கேடுகெட்ட அரசில்தான் ஹக்கீமும் இருக்கின்றார். ஆகவே வெற்றிலையையும் மரத்தையு தூக்கி வீச வேண்டும்
ReplyDeleteHere someone comments about some Muslim politician’s duties and responsibilities regarding this tension but; I could observe no one include leading Muslim party SLMC and its members, why?; Did not you think? They also accountable persons to this tyrant Government, also they have to responsible to Judiciary of Srilanka, then what happened them why they did not took any action against it? Although our opinion is all Muslim leaders are not be as Muslims but they are working behalf of this Buddhist Government even they could not accept Islamic “Jihath”, Dear friends I invite you all to buildup peaceful Islamic unitary like Libiya, Egipt ant Siriya, without any political desires .
ReplyDelete