Header Ads



செவ்வாய் கிரகத்தில் மனித குரல் கேட்கிறதாம்..!

 
மாலை மலர்
 
செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சப்தங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் அனுப்பபட்ட கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாயில் மனிதர்கள் வாழுவதற்கு ஏற்ற சூழ்நிவை நிலவுகிறதா என்பதை ஆராய, கடந்த 6ம் தேதி அங்கு தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
 

3 comments:

  1. வேற்று கிரக மனிதர்கள் என்றும், வேற்றுக் கிரகங்களில் மனிதர்கள் வாழ ஆராய்வதும் என இவ்வளவு ஆட்டம் எதற்காக?
    சில வேளைகளில் பறக்கும் தட்டு தென்பட்டதாகவும் அது வேற்றுக் கிரகவாசிகளது என்றும் பிதற்றிவிட்டு இன்று யூகம் தெரிவிக்கப்படுகிறது.
    எத்தனையோ விஞ்ஞானிகள் அல்குர்ஆனில் பிழை பிடிக்கப்போய் இஸ்லாத்தை ஏற்ற சரித்திரம்தான் உண்டு.

    ReplyDelete
  2. பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழக் கூடும். ஆனால் மனிதர்கள் எனும் இனம் பூமியில் மட்டுமே படைக்கப் பட்டுள்ளது. செய்தான்கள் ஜின்கள் மற்றும் நுண் உயிர்கள் ஏனைய கிரகங்களில் வாழ்வது சாத்தியமான ஒன்றே.

    ReplyDelete
  3. இஸ்லாத்தில் ஜின்கள் குறித்து சொல்லப் பட்டுள்ளது. எனினும் வேற்றுக் கிரக வாசிகள் குறித்து எங்கேயும் எதுவும் குறிப்பிடப் படவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.