Header Ads



பள்ளிவாசலை பாதுகாத்த தமிழர்களுக்கு நன்றி..! - மௌலவி மன்சூர்


UN
 
கொடூரமான போருக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம் - பருத்தித்துறைப் பகுதி மக்கள் எங்கள் பள்ளிவாசலுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் பாதுகாத்துள்ளார்கள். போர்க் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த எந்த ஒரு முஸ்லிமுக்கும் எதுவிதமான இன்னல்களும் இழைக்கப்படவில்லை என்று மௌலவி எம்.எஸ்.எம்.மன்சூர் தெரிவித்தார்.

பருத்தித்துறை முகைதீன் ஹமீதியா பள்ளி வாசலில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மௌலவி எம்.எஸ்.எம்.மன்சூர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

பருத்தித்துறை மக்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் சமாதானத்தையும், அமைதியையும் நேசிப்பவர்கள். கொடூரமான போர் நடைபெற்ற வேளையிலும் எமது பள்ளிவாசல் எதுவித சேதமுமில்லாமல் பிரதேச மக்களால் பாதுகாக்கப்பட்டதுடன் இங்கிருந்த முஸ்லிம்களுக்கும் எதுவித இடைஞ்சல்கள் இன்னல்கள் நேராமல் பாதுகாத்துள்ளார்கள்.

இந்தப் பள்ளிவாசலைத் திருத்திப் புனரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கலாசார அமைச்சும் அனுமதி வழங்கியுள்ளது. பள்ளிவாசலைப் புனரமைப்பதற்கான ஆலோசனையையும், ஒத்துழைப்பையும் இந்தப் பகுதி மக்கள் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். சகலரும் ஒற்றுமையாகவும் அமைதியுடனும் வாழ்ந்தால் நாடு சிறப்பாக முன்னேற்றமடையும்.

நாட்டில் எந்தப் பகுதியிலாவது எந்த மத மக்களும் தமது மதக் கலாசாரங்களைப் பேணி வாழ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அரசுக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு மனிதனும் தனது சமய வழியில் நின்று ஒழுகும்போது உயர்வடைவான். இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மக்கள் அனைவரும் இறை நம்பிக்கையோடு வாழ்ந்து வருகின்றனர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். பள்ளிவாசல் நிர்வாகத்தலைவர் அப்பாஸ் ராஸிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பருத்தித்துறை நகர சபைத் தலைவர் சட்டத்தரணி சபா ரவீந்திரன், நகர சபை உபதலைவரும் வர்த்தக சங்கத் தலைவருமான எஸ்.பத்மநாதன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

1 comment:

  1. யாழ்பாணம் மன்னார் கிளிநொச்சி முல்லைதீவு போன்ற மாவட்டங்களில் இருந்த 64 பள்ளிவாசல்களில் மூன்று பள்ளிவாசல்களே உடைக்கப் படாமல் காணப் பட்டன. பருத்தித்துறை பள்ளி கொடிகாமம் பள்ளி மற்றும் மண்கும்பான் பள்ளிவாசல் என்பன நல் நோக்கம் உள்ள தமிழ் மக்களால் பாதுகாக்கப் பட்டுள்ளது. அவர்களுக்கு எமது நன்றிகள். பருத்தி துறை கொடிகாமம் மற்றும் மண்கும்பான் பிரதேசங்களில் கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக தமிழ் முஸ்லிம் உறவுகள் நன்றாகவே இருந்துள்ளன. இது தொடர எமது பிரார்த்தனைகள்.
    அதே வேளை ஏனைய 61 பள்ளிவாசல்களை உடைத்தவர்கள் யார். அவர்கள் என்ன பிராயச் சித்தம் செய்ய போகிறார்கள். ஏனைய பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் உறவு மீள கட்டியெழுப்பப் பட அரச அதிகாரங்களில் உள்ள சில தமிழர்கள் மனசு வைத்தால் போதும். திட்டமிட்டு தடுக்கப் படும் மீள் குடியேற்றங்கள் வீணான நிபந்தனைகள் என்பன அகற்றப் பட தமிழ் உயர் அதிகாரிகள் முயல வேண்டும். ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே தடை இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான அபிப் பிராயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப் பட்டுள்ளதாகும். இஸ்லாத்தை பற்றி ஒவ்வொரு தமிழரும் அறிந்து கொள்ள முற்பட வேண்டும். தமிழ் வேதங்களான ரிக் அதர்வண சாம யசூர் வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றியும் இறுதி நபியை பற்றியும் என்ன கூறப் பட்டுள்ளது என்பதை தமிழர்கள் ஆராய வேண்டும். மேலும் இந்து வேதங்களில் கூறப் பட்டுள்ள கடவுள் கொள்கை யாது இஸ்லாத்தில் கூறப் பட்டுள்ள கடவுள் கொள்கையுடன் அது எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை தமிழர்கள் ஆராய வேண்டும். எல்லா வேதங்களுக்கும் பொதுவான ஒரு விடயத்தில் ஒன்று படுவதன் மூலமாகவே மக்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க முடியும்.
    வேதங்களை சரியாக ஆராயாமல் மூட பழக்க வசக்கன்களை பின் பற்றி நடந்தால் அதனூடாக ஒற்றுமை ஏற்படாது. இதனால் சமூகங்களுகிடையில் மனக் கசப்புகள் சிக்கல்கள் தோன்றி மோதல்களுக்கு வலி சாய்த்து அதனூடாக மனிதன் நிம்மதி இழந்தவனகின்றான்.
    யாழ்பாணத்திலும் மன்னாரிலும் முஸ்லிம்களை குடியேற்றுவதட்கு ஒத்துழைப்பு வழங்கிப் பாருங்கள். உங்கள் மனதிலேயே ஒரு சந்தோசம் உருவாகும். மாற்றமாக முஸ்லிம்கள் குடி ஏறுவதை எப்படி தடுக்கலாம் என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டால் மனது எப்போதும் சஞ்சலத்தில் மூழ்கி விடும். இதனால் மன அழுத்தம் நிம்மதியின்மை தூக்கமின்மை நெஞ்சு நோய்கள் என்பன உருவாகிவிடும்.
    எனவே இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களை பற்றியும் உங்களின் வேத நூல்களையும் இஸ்லாத்தின் வேத நூலின் தமிழாக்கத்தையும் படித்து அறிந்து அதன் படி செயட்படுமாறு வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேசங்களில் வாழும் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.