Header Ads



மஸ்ஜித்துல் ஹரம் பள்ளிவாசல் இமாம்களின் பணி..!


எம். எஸ். ஷாஜஹான்
புனித நோன்பில் மக்கா செல்லும் நோன்பாளிகள் அதிகம் எதிர்பார்ப்பது மஸ்ஜிதுல் ஹரம் என்ற பெரிய பள்ளியில் எந்த இமாம்கள் எந்தெந்த தொழுகையை நடத்துகிறார்கள் என்பதுதான்.

இரண்டு புனித மஸ்ஜிதுகளின் பொறுப்பாளர்கள் கீழ்க் கண்டமுறையில் ஹரத்தின் ஏழு இமாம்களுக்கான பணியை நிர்ணயம் செய்துள்ளனர். அதன்படி இமாம்களான ஷேய்க் அப்துல்லா அல் ஜொனானி அவர்களும் ஷேய்க் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ் அவர்களும் ரமழானின் முதல் 20 நாட்களும் தகஜ்ஜத் மற்றும் தராவிஹ் தொழுகையை ஒற்றைப் படை நாட்களில் நிறைவேற்றுவர். அதாவது 1,3,5,7,9 போன்ற வரிசையில், ஷேய்க் சவூத் அல்- ஸொரைம் அவர்களும் ஷேய்க் மவுர் அல் மொய்க்லி அவர்களும் இரட்டைப்படை நாட்களிலும் தொழுகை நடத்துவார்கள். அதாவது 2,4,6,8,10 என்றரீதியில் ரமழானின் கடைசி 10 தினங்களிலும் அல்ஜெஹானி அவர்களும் அல்மொய்க்லீ அவர்களும் தராவிஹ் தொழுகையை நிறைவேற்றுவார்கள். அல் ஸொரைச் அவர்களும் அல்கதேஸ் அவர்களும் தஹஜ்ஜத் எனும் பின் இரவு தொழுகையை நடத்துவார்கள்.

முதல் நோன்பு வெள்ளிக்கிழமை அன்று நடந்த ஜூம் ஆ தொழுகையை ஷேய்க் கலே அல் தலெப் அவர்கள் நடத்தினார். மற்ற வெள்ளிக்கிழமை ஜூம் ஆதொழுகையை ஷேய்க் ஒசாமா கய்லாட், அல் ஸொரைம், ஷேய்க்சாலே பின் ஹுமைத். அல்சுதைஸ் ஆதியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

கத்தமுல் குர்ஆன் தொழுகையை ஷேய்க் அல் சுதைப் அவர்களுக்கும் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையை ஷேய்க்ஹ¥மைத் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஹரத்தின் இமாம்களைப் பொறுத்தவரையில் அவர்களது முழுநேரமும் இந்த பள்ளிவாயலியே செலவிடப்படும். உலக விசயங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை மஸ்ஜிதுல் ஒவ்வொரு இமாமிற்கும் வசதியான தனி அறைகள் உண்டு.

அவர்கள் தொடர்ந்து குர் ஆனைப் பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள் தங்களது நினைவு ஆற்றலை சோதித்துக் கொண்டும் இருப்பார்கள். இங்கு வரும் யாத்திரிகர்கள் இமாம்கள் மீது பெரிதும் மதிப்புவைத்து இருக்கிறார்கள் நேரில் அவர்கள் முகத்தை பார்க்க அனைவரும் ஆசைப்படுவர் சலாம் கொடுக்க விரும்புவர்.

ஆகவே இமாம் தொழுகை தலத்திற்கு பாதுகாப்பு ஊழியர்களோடேயே வருவர் போவர். இதற்கென 10 பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளனர். இமாம் அவர்கள் தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் மூத்த இமாம் ஒருவர் நிற்பார். ஓதும் இமாமிடம் ஏதும் தவறு ஏற்பட்டால் அவர் உடனே திருத்துவார். அதிகமாக இந்தப் பணியைச் செய்வது ஷேய்க்ஹ¥மைத் அவர்கள்தான். மூத்த இமாமமாகிய ஹ¥மைத் அவர்கள் பெரிய பள்ளிவாயலின் கத்தீபும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த இமாம்களின் பட்டியலில் ஷேய்க் அப்துல் ரகுமான் அல் சுதைஸ் அவர்களும் உள்ளார். 12 வயதிலேயே முழுகுர் ஆனையும் பாராயணம் செய்தவர் அவர். இவருடைய இனிமையான குரலும் தொனியும், இவர் குர் ஆனை ஓதும் முறையும் உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் ரமழான் 20லிருந்து நடத்தப்படும் கியாமுமுல்லைல் என்ற பின்னிரவு தொழுகை அதாவது 1 மணிமுதல் 2 மணிவரை நடைபெறுவது, இதனை நடாத்துபவர் அல் சுதைஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ரமழான் 27ல் நடத்தும் ‘தவ்பர்’ என்னும் பாவமன்னிப்பு தொழுகையையும் சுதேஸ் அவர்களே நடத்துகிறார். அவர் கண்ணீர் விட்டு அழும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் பல இலட்சக்கணக்கானவர்களும் அழுது மன்றாடி அல்லாவிடம் பாவமன்னிப்பு இறைஞ்சுவது உள்ளத்தை தொடும் நிகழ்வாகும்.

யாசிக்கதடை:- இது நிற்க சவூதியில் ரமழான் காலத்திலும் ஹஜ்காலத்தின் போதும் யாசகர்களின் தொல்லையை தவிர்ப்பதற்காக அரசு பல உத்திகளைக்கையாள்கிறது. இவர்கள் அனைவருமே வறியவர்கள் அல்லர். பெரும்பாலானோர் தகுதி அல்லாதவர்களே யாசகம் கேட்பதை ஒரு தொழிலாக, வர்த்தகமாக இவர்களில் பலர் செய்திருகிறார்கள். அதுமட்டுமல்லாது குற்றக் கும்பல்களே இத்தகையவர்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக மக்காவிலும், மதீனாவிலும், ஜித்தாவிலும் இந்த யாசர்கள் அதிகமாகக் காணப்படுவர். சவூதியின் குடிவரவு இலாக்கா இவர்கள் மீது கடுமையான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. வீதியிலோ அல்லது அங்காடி கடைகள் முன்னாடியோ அல்லது பிரபல ஷொப்பிங் சென்டர் முன்பாக இவர்கள் நடமாடினால் குடிவரவு இலாகா இவர்களைக் கைது செய்கிறது. இதற்காக அதிக ஊழியர்களையும் வாகனங்களையும் அது உபயோகிக்கிறது. ஆண், பெண் என்ற பேதமின்றி முதியவர் குழந்தைகள் என்ற தாட்சண்யமுமின்றி யாசகம் கேட்கும் யாராக இருந்தாலும் அவர்கள் வேனில் ஏற்றப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல தெருஓரத்தில் விரிப்புகளில் சில பொருட்களை போட்டு விற்பது போல் பாவனைசெய்து யாசகம் கேட்கும் கூட்டத்தினரை கடை போடவிடாது தடைசெய்கிறார்கள்.

இத்தகையவர்கள் பெரும் பாலும் ஜாசன் துறைமுகம் வழியாக வந்து ரமழானுக்கு முன்பே ஜித்தா, மக்காவிற்கு செல்ல முயல்வர். சுமார் 25,122 பேர் ரமழானுக்கு முன்பாக வருகையைத் தடைசெய்து துறைமுகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அங்கவீனர்களாக காட்சியளிக்கும் சில குழந்தைகள் பெரியவர்கள் கூட குடிவரவு இலாகாவின் கண்களில் இருந்து தப்பவில்லை இந்த யாசகர்கள் சவூதியை சுற்றி உள்ள பல நாடுகளில் இருந்து வருபவர்கள்.

பயணிகள் வருகை புறப்பாடு :- அதோடு ஹஜ் அமைச்சர் பந்தர்ஹஜார் அவர்கள் ஒக்டோபர் 1ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இதுவரை 48லட்சம் உம்ரு பயணிகள் வந்து திரும்பியுள்ளனர் என்றார். இத்தொகை பொதுவாக 60 லட்சத்தை தொடும் என்றார் அவர். ரபிஉல் அவ்வல் 1433 துவக்கத்தின்படி 16,419 விமானங்களில் 2,573,627 பேர் வந்ததாகவும் 2,572,175 பேர் தங்கள் நாடு திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.ஜூலை 30 திங்கள் மட்டும் 125 விமானங்களில் 22,059 உம்ரா பயணிகள் வந்ததாகவும் அதே தினம் 16,276 பேர் தங்கள் தாயகம் திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். ஜித்தா விமான நிலையத்தில் பயணிகளுக்கு எந்த குறையும் இல்லாது சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரியும் கூறினார்.

பாதுகாப்பு:- இவ்வளவு அதிகமான ஜனங்கள் வந்து போகும் நிகழ்வு உலகில் வேறு எங்கும் இல்லை எனலாம். இவ்வளவு பேர் கூடிக்கலையும் இடத்திற்கு போதிய பாதுகாப்பு வேண்டும் அல்லவா. அந்தப் பணியை மக்கள் பாதுகாப்பு இலாகா செவ்வனவே நிறைவேற்றி வருகிறது. 10000 ஊழியர்கள், 2000 வாகனங்கள், ஒன்பது ஹெலிகொப்டர் சகிதம் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள். எத்தகையை அவசரநிலையையும் கையாளும் ஆற்றல். இவர்களுக்கு உண்டு. இவர்களது குடையின் கீழ் மக்கா மதீனா இரண்டுமே வருகின்றன.

அரசு மக்காவிலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் உள்ள 6000 பயணிகள் தங்குமிடங்களில், கட்டிடங்களில் அதனை பரிசோதித்து அதன் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இத்தங்குமிடங்களில் எங்கு என்ன அனர்த்தம் நடந்தாலும் அதனை உடனடியாகக் கட்டுக்கு கொண்டு வர போதிய ஆயத்த நிலையில் அவர்கள் உள்ளார்கள். அதுமட்டுமல்லாது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டுப் பிரசுரங்கள், கைபேசி வழிசெய்திகள். தெருவில் வழிகாட்டும் பலகைகள் ஆகியவற்றையும் அரசு பாவிக்கிறது.

மருத்துவ வசதி செய்து கொடுப்பதற்காக பெரிய பள்ளி வாசலை சுற்றியும், ஹரத்திற்கு வரும் நெடுஞ்சாலைகளிலும் 2000 மருத்துவர்கள் இரவு பகலாக வேலைசெய்கிறார்கள். இந்த வருடத்து ரமழான் கோடை காலத்தில் வருவதால் வெப்பநிலை சுமார் 48 டிகிரி அளவில் மக்காவில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு சிலபகுதிகள் 50 டிகிரி வரை தொட்டுள்ளது. மலைப்பகுதிகளில் அதிக வெப்பநிலை 34 டிகிரி அளவில் இருக்கும்.

2ம் அல்குரா கலண்டர்படி நோன்பு காலம் 14மணி 40 நிமிடங்களாக தலை நோன்பில் இருந்தது. சுபுஹ் தொழுகையானது 4.25க்கும் மஹ்ரிப் 7.05மாக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி இரவு நேரம் 9 மணி20 நிமிடங்கள் மட்டுமே. அதோடு சவூதியின் கல்வி அமைச்சர் குழந்தைகளுக்காக விசேஷமான பொழுதுபோக்கு திட்டம் ஒன்றை அமைத்துள்ளது. இதன்படி 500 ரமழான்கிளப்கள் சவூதி ரியால் இரண்டு கோடி செலவில் நகரங்களிலும் கிராமங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிளப்பிற்கும் ரியால் 40000 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கிளப்புகள் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கான பல பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளை ரமழான் 19வரை செயற்படுத்தும். இது தராவிஹ் தொழுகை முடிந்த பின் சுமார் நான்கு மணித்தியாலயங்களுக்கு நடத்தப்படும். சிறுவர் சிறுமிகள் அனைவருக்கும் இது இலவசம்.

தினகரன் வாரமஞ்சரி

5 comments:

  1. Masahallah good article,many things new me and learned!Jasakallah khairan for article!

    ReplyDelete
  2. சகோதரர் ஷாஜஹான் அவர்களே உங்களது கட்டுரை மிகவும் பாராட்டத்தக்கது. நான் ரொம்பவும் வரவேற்கின்றேன் இப்படியான மார்க்க பொது அறிவு சம்பந்தமாக நிறைய விடயங்களை வரவீட்கின்றோம் அல்லாஹ்வின் கருணையும் பரக்கத்தும் உங்களுக்கு இதற்கு முன்னரும் ஒரு சிறந்த கட்டுரையை தந்தீர்கள்.

    ReplyDelete
  3. rayeesa profile picture ரை முதலில் மாற்றுங்கள் பிறகு மார்க்க விசயத்தை கேளுங்கள்

    ReplyDelete
  4. great information sajahan. keep it up man

    ReplyDelete
  5. சகோதரர் எழுதிய ஆக்கத்தில் பல்வேறு எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் காணப்படுகின்றன. 27ம் இரவில் தவ்பா விஷேட தொழுகை ஒன்று இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் தவரான தகவலாகும். இப்படியான வழிகாட்டல் இஸ்லாத்தில் எங்குமே சொல்லப்பட்டது கிடையாது. நபியவர்கள் ரமழானின் கடைசிப் பத்து முழுக்க இஃதிகாப் இருந்து லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முயற்சித்தார்கள் என்பது தான் நிதர்சனம்.
    அதே வேலை ஹரம் இமாம்கள் வேறு தொழில்கள் செய்வதில்லை என குறிப்பிட்டிருந்தார். இதுவும் உண்மைக்கு புரம்பான ஒரு செய்தியாகும். காரணம் இமாம் சுதைஷ் மற்றும் இமாம் ஷுரைம் உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாக கடமையாற்றுகின்றனர்.
    எனவே கட்டுரையாளர் திருத்திக் கொள்வார் என எண்ணுகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.