Header Ads



உரிமைகளை சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது

 
ஹபீஸ்
 
ஆளுநர்களாகவும், அரசாங்க அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கத்தக்கதாக, வடக்கு, கிழக்கில் படை உயரதிகாரிகள் அவ்வாறான பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வாழைச்னையில் சனிக்கிழமை (25) இரவு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரகார கூட்டத்தில் உரையாற்றிய போது கேள்வி எழுப்பினார்.
 
சனிக்கிழமை (25) மாலை அமைச்சர் ஹக்கீம், மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, வாழைச்சேனை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரகாரம் கூட்டங்களில் உரையாற்றினார்.
 
வாழைச்சேனை பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளை பாராளுமன்ற உறுப்பினர் பஷீர்சேகு தாவூத், மாகாண சபை வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமத், சவாஹிர் சாலி, சட்டத்தரணி ராசிக் ஆகியோரும் உரையாற்றினர். வேட்பாளர் இஸ்மாயில் ஹாஜியார் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மீராமுஹதின் ஹாஜியார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அமைப்பாளர் ஹீசைன் தலைமை தாங்கினார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்து பேச முன்வந்துள்ளது. முஸ்லிம் தரப்பின் தேவைகளை அவர்களிடம் முன்வைத்தால் எங்களுக்காக அவற்றைப் பெற்றுத்தர அவர்களால் முடியும் என்கிறார்கள். இவ்வாறுதான் விடுதலைப் புலிகளும் கூறிவந்தனர். முஸ்லிம்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம். அதன் உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது. என்பதை சகல தரப்பினர்களுக்கும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

பெருந்திரளான மக்கள் பங்குபற்றிய இப் பிரசாரக் கூட்டத்தில் மு.கா.தலைவர் அமைச்சர் ஹக்கீம் நீண்ட உரை ஒன்றை ஆற்றினார்.

 
 

4 comments:

  1. Dear Hakeem, Neengal sondhak kaalil ninru petruk koduththa oru urimaiyach chollungo parppom.

    Dear Hakeem please tell us at least one right that you won for muslims in Sri Lanka! you have done nothing to muslims but helped only the LTTE and their Leader to internationalize their issues. We still remember the vote of condolence on the death of Tamil Chelvam "the dove of peace" in your own words. So please stop deceiving the people and give up politics for the interest of the entire Muslim community living in the country.

    ReplyDelete
  2. Dear Hakeem, Please tell us at least one right that you have won for Muslims in Sri Lanka? The truth is you have done nothing to Muslims but we acknowledge that you have helped LTTE and its former slain leader Prabagaran a lot by internationalizing their issues and by paying condolences on to the death of Tamil Chelvam , who was "a dove of peace" in your opinion.
    So please stop deceiving the muslims and give up politics for the sake of entire Muslim community.

    ReplyDelete
  3. Yea Mr.Hakeem,please give up politics.Mr Ikram will replace you and do wonders to the Srilankan muslim community.

    ReplyDelete
  4. இன்னும் அமைச்சரவை அங்கத்தவரான அதுவும் நீதியமைச்சரான நீங்கள் ஏன் இந்த கேள்வியை அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் எழுப்பாமல், முன்னால் நிற்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், கேணப்பயல்கள் என்று நினைத்துக்கொண்டா இந்த கேள்வியை வாழைச்சேனையில் எழுப்புகிறீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.