சிறைக் கைதியின் விடுதலைக்கு உதவிய ரவூப் ஹக்கீம் (படம் இணைப்பு)
நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்துவதற்கு வசதியில்லாத காரணத்தினால் மட்டக்களப்பில் நான்கு மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்கும் ஒருவரின் விடுதலைக்காக உரிய தொகையை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரஸ்தாப நபரின் தாயாரிடம் வழங்கியுள்ளார்.
ஏறாவூரிலுள்ள அமைந்துள்ள குல்லியதுல் தாருல் உலூம் அரபுக்கல்லூரியை பார்வையிடுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ஹக்கீம் அங்கு அண்மையில் சென்றிரந்த பொழுது சம்மந்தப்பட்டவரின் தாயாரான காத்தான்குடியைச் சேர்ந்த சித்தி உம்மா என்பவரிடம் அதற்கான பணத்தை அவர் கையளித்துள்ளார். அப்பொழுது அந்த அரபுக் கல்லூரியை பரிபாலித்து வரும் ஹாபிஸ் நஸீர் அஹமதும் உடனிருந்தார்.
அமைச்சர் ஹக்கீம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்றிருந்த பொழுது, அங்கிருந்த முஸ்லிம் சிறைக் கைதிகள் புனித நோன்பை நோற்ப்பதற்கும், இப்தாருக்குமான ஏற்பாடுகள் பற்றி கேட்டறிந்ததோடு, அவர்களின் குறைபாடுகள் பற்றியும் அளவளாவினார். அவற்றிக்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.
அப்பொழுது அங்கிருந்த சிறைக்கைதி ஒருவர் அமைச்சரை அணுகி, தாம் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்த வசதியற்ற ஒரே காரணத்திற்காக நான்கு மாதங்கள் சிறையில் வாடுவதாகக் கூறிய பொழுது கவலையடைந்த அவர், விடுவிப்பதற்காக தேவைப்படும் பணத்தை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.
விடுதலை செய்யப் பட்டது ஒரு முஸ்லிம் என்ற வகையில் இதனை தவறு என்று சொல்ல முடியாது.
ReplyDeleteகேட்க விரும்பும் கேள்வி, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப் பட்டிருக்காவிட்டால், அந்தப் பகுதியை திரும்பிக் கூடப் பார்த்திருப்பாரா ரவூப் ஹக்கீம்? சரி, இவர் இதனை முஸ்லிம்களுக்காக செய்தார் என்றால்,
மன்னார்...... பெயரைச் சொன்னாலே, மற்றப் பக்கம் திரும்பிக் கொண்டு கேட்காதது போல போய் விடுவரோ....
மன்னார் அநீதவான் நீதிமன்றத்திட்கு வேலையில், தெருவில் வந்து,தமிழ்ப் பட ரவுடி மாதிரி அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளும்படி அராஜகமாக பொலிசாருக்கு கட்டளை போடுகின்றார், அநியாயமாக பல மன்னார் முஸ்லிம்கள் ரமலானை சிறைகளில் கழிக்கின்றனர், இன்னும் பலரை கைது செய்ய அநீதிபதி உத்தரவு போட்டுள்ளார்.
இவ்வளவு நடந்தும், நீதி அமைச்சராக இதே ரவூப் ஹக்கீம் இருந்தும் எடுத்த நடவடிக்கை என்ன? குறைந்த பட்சம் அநீதிபதி இடைநிறுத்தம் செய்யப்படக் கூட இல்லை. அநீதிபதியின் அராஜக செயல் பாட்டுக்கு எதிராக எந்த விசாரணைக்கும் இதுவரை உத்தரவிடவில்லை. இவர் என்ன செய்கின்றார்?
''ஆசியன் த்ரிபியூனால்'' அநீதிபதியிடம் பேட்டி கண்டு, உண்மையை வெளிப்படுத்திய அளவுக்காவது இவர் ஏதாவது செய்தாரா?
ரவூப் ஹக்கீம் இதனை வாசிக்கா விட்டாலும் அவருடன் இருக்கும் எவராவது வாசித்தால், இதனை அவரிடம் சென்று சொல்லுங்கள்.
ivvaru nanri kettu kathaikka koodathu nanbare, anru avar mannar uppukulam senru pirachinai halai kettarinthu wanth padangalai news parkka willaya, ungaluuku theriyatha, avarathu katchilil vote kettu wenru , inru awarukke kuli vettum rizad ponror avari varuhaiyo muslim congree involve aawathai virumbavillai, arasin uyar matta aravanaippal . rauf hakkeem alatchiyapaduthirar ungal mahan rizad.
ReplyDeleteமையத்து வீட்டில் சென்று துக்கம் விசாரிப்பது போல, உப்புக்குளத்திட்குச் சென்று கதை கேட்டு விட்டு, வழமை போலவே "நடவடிக்கை எடுப்பேன்" என்று வெற்று வார்த்தை சொல்லிவிட்டு, மறக்காமல் புகைப்படங்கள் எடுத்து ஊடகங்களில் போட்டு விளம்பரம் தேடிக்கொள்வதால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு என்ன பயன்?
ReplyDeleteநீதி அமைச்சர் என்ற ரீதியில் எடுத்த நடவடிக்கை என்ன? சட்டத்துறையில் அதி உயர் தகுதி பெற்ற சட்டத்தரணி என்ற ரீதியில் செய்தது என்ன??
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இவரது கட்சியில் வாக்குக் கேட்டு வென்றார் என்பதை குறை கூறுவதானால், ஐக்கிய தேசியக் கட்சியில் வாக்குக் கேட்டு வென்று விட்டு, தேர்தல் காலத்தில் பேசிய கொள்கை கோட்பாடுகளை எல்லாம் குப்பையில் தூக்கி எறிந்து விட்டு, எத்தனை தடவை ஆளும் கட்சியில் அமைச்சர் பதவி பெற்றிருப்பார்???
ரிஷாத்தின் அரசியல் வாழ்க்கை, இவரை விட மிகவும் குறுகியது. இருவருமே அமைச்சர்கள், ஆனால் ரிஷாத் சமூகத்திற்குச் செய்த சேவை எங்கே, இவர் செய்தது எங்கே? மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.
( தயவு செய்து கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி இலகுவாக தமிழில் கருத்துக்களை பதியுங்கள், அது உங்கள் கருத்துக்களை தெளிவாக வாசித்துப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
www.google.com/transliterate/tamil )
madeyen mathiri neethipthiku achuruthel koduthu maddirike thevalle, theerpu pileyanethu yenral mean mureyeedu seythirukalam. thanethu roudisethe neethimanrethule kaddeluma? mannar makkeluku aneethinadenthuthan iruku athuku sariyane mureye kayyalenum. afiviruthi sampanthema sollirukinge sarenakathi aresiyel seyretha iruntha naaye anuppinalum athuvum afiviruthi seyyum anuppi parunge..........
ReplyDeleterisadde gavrment kaapathiru irunthalum averal thoondapaddu inru sireyil vaadum naferheley yaarthan paarper????????????
@ basheer abdul
ReplyDeleteநான் இங்கே அபிவிருத்தியைப் பெற்றி பேசவே இல்லை. நீங்கள் வேண்டுமானால் நாயை அனுப்பிப் பாருங்கள். பேசுகின்ற பேச்சைப் பார்த்தால் அதைத்தான் செய்வீர்கள் போலும்.
வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட மக்களுக்கு ரிஷாத் செய்ததற்குப் பெயர் அபிவிருத்தி அல்ல, வாழ்க்கை.....
மீள் குடியேற்றத்தை முன்னின்று செய்வது யார், அதனால் சந்திக்கும் சவால்கள் எத்தனை???? ரவூப் ஹக்கீம் செய்ததெல்லாம், பிரபாகரனுடன் சுண்டல் காகிதத்தில் ஒப்பத்தம் எழுதி, பிரபாகரனோடு சேர்ந்து ஆட்டிறைச்சி பிரியாணி சாப்பிட்டு ஏப்பம் விட்டதுதான்.
சரி, வடக்கை விடுங்கள், தம்புள்ளை பள்ளி விவாகரத்தில் முன்னுக்குப் போனது யார்? பிரதேச செயலாளரிடமும், பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும் நாக்கைப் பிடுங்குவது போல தைரியமாக நாலு கேள்வி கேட்டது யார்?
உங்களுக்கு மன்னார் விவகாரத்தின் அடி நுனி கூட புரியவில்லை. சிஹல உருமயவின் சம்பிக்க ரணவக்கவுக்கு தெரிந்த அளவுக்குக் கூட
உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் நிலையில் கருத்துச் சொல்ல வந்திருப்பது கவலை தருகின்றது. யாழ் முஸ்லிம் தளத்தில் இது தொடர்பாக நிறைய செய்திகள், பேட்டிகள், கட்டுரைகள் வெளிவந்துவிட்டன. அவரை முழுமையாக வாசித்துத் தெரிந்த பின்னர் மன்னார் விவகாரம் பற்றிப் பேசுவதாக இருந்தால் பேசுங்கள்.
அடிப்படையே தெரியாமல் பேச வேண்டாம். குறிந்த பட்சம் மன்னார் அநீதிபதியின் 'ஆசியன் திரிபியூன்' பேட்டியையாவது முழுமையாக புரிந்து வாசித்தீர்களோ தெரியவில்லை.