தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போடோ பயங்கரவாதிகள் தாக்குதல் - மூவர் வபாத்
அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகள் கொக்ராஜர் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது ராணுவ உடையில் துப்பாக்கிகளுடன் வந்த போடோ தீவிரவாதிகள் மஸ்ஜிதுக்கு காவல் நின்றவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
எந்த நிமிடமும் போடோக்கள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையுடன் மஸ்ஜிதுக்கு காவலுக்கு ஆட்களை நிறுத்திவிட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்பொழுது ராணுவ உடையில் வந்த போடோக்களை பார்த்தவர்கள் ராணுவம் என்று கருதி அசட்டையாக இருந்துவிட்டனர். அவ்வேளையில் திடீரென துப்பாக்கியால் போடோ பயங்கரவாதிகள் சுடத் துவங்கியுள்ளனர். இச்சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
Post a Comment