கல்லால் அடித்து இருவர் கொலை - மாலியில் முஸ்லிம் போராளிகளின் தண்டனை
ஆப்ரிக்க நாடான மாலியில், திருமணம் செய்யாமல் குழந்தை பெற்ற ஜோடி, கல்லால் அடித்து கொல்லப்பட்டனர். மாலி நாட்டின் வடக்கு பகுதி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள மக்கள் மத விதிமுறைகளை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
அகூயல்ஹோக் என்ற நகரில், இளம் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்று விட்டனர். இதை அறிந்து கொண்ட கிளர்ச்சி பிரிவு தலைவர்கள், காதல் ஜோடியை, மத்திய பகுதிக்கு அழைத்து வந்தனர். நான்கு அடி ஆழத்துக்கு இரண்டு பள்ளங்களை தோண்டி இருவரையும் கழுத்து புதையும் அளவுக்கு மண்ணை போட்டு மூடினர். தலை மட்டும் வெளியே தெரியும் படி இருக்க, அப்பகுதியை சேர்ந்த 200க்கும் அதிகமான மக்கள் கோஷம் போட்டப்படி இந்த ஜோடியை கல்லால் அடித்தனர். இருவரும் துடிதுடித்து இறந்த பிறகு சூழ்ந்திருந்த மக்கள் அமைதியாயினர்.
Please dont publish this Shariah news like hypocrite way. They did not do this for non believers. They done this for Murthath who give birth by ZINA so we have to over look this problem because their newly ruling had taken by BLACK FLAG organisation
ReplyDeleteஇஸ்லாத்தில் கலியாணம் முடிக்கதாவர்ஹலை கல்லால் எரிந்து கொல்ல சொல்லவில்லை. ஹத்துதான் அட்டிக்க சொல்ஹின்றது. இது இஸ்லாதை விளங்காமல் செய்த சேயல்
ReplyDeleteமனித உரிமை மீறல் என்று சிலர் கோஷம் எழுப்புவர்களே!
ReplyDeleteஇது போன்ற தண்டனைகள், குற்றச்செயல்களை இல்லாமலாக்கும்
உயர் நோக்கத்தோடு இஸ்லாம் வகுத்துள்ளது. இஸ்லாமிய நாடுகளெல்லாம்
இவற்ற்றை அமுல்படுத்தினால் நல்லதொரு சூழல் உருவாகும். என்றாலும்
முஸ்லிம் தலைவர்கள் எத்தனையோபேர் குற்றவாளிகளாக அல்லவா இருக்கிறார்கள்.
யா அல்லாஹ்..........................
ReplyDeleteஅல்லாஹ்வின் சட்டங்கள் துஸ்பிரயோகம் செய்யப் படுகின்றன.
திருமணம் செய்தவர்கள் விபச்சாரம் செய்தால் தான் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
திருமணம் செய்யாதவர்கள் விபச்சாரம் செய்தால் கசையடிதான் வழங்கப்பட வேண்டும்.
மேற்படி சம்பவம், செய்தி வழங்கப்பட்ட அதே விதத்திலேயே நடந்திருக்குமானால், இரண்டு உயிர்களை அநியாயமாகக் கொலை செய்த பாவம், இந்தத் தீர்ப்பை வழங்கியவர் மீது செல்கின்றது.
இவ்வாறான மித மிஞ்சிய செயல்பாடுகள், இஸ்லாத்தைப் பற்றிய வெறுப்பை, முஸ்லிமல்லாத மக்கள் மத்தியில் விதைக்கவே உதவுகின்றன.
விபச்சாரம் செய்ததற்குத் தண்டனையாக கல்லால் அடித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற கோஷம் ...........அல்லது தண்டனை இஸ்லாமிய ஷரியா சட்ட தண்டனை அல்ல.
ReplyDeleteஅது அராபிய கோத்திரவாத , இஸ்லாத்துக்கு முரணான தண்டனை முறையாகும்.
இஸ்லாமிய சட்ட அடிப்படை மூல நூலான அல் குர்ஆனில் 'கல்லெறி' தண்டனை பற்றிய குறிப்புகள் எதுவும் எங்குமே இல்லை.
மூல நூலில் இல்லாத சமூக சட்டங்கள் மூல நூலுக்கு முரணான முறையில் ஷரியா என்ற பெயரில் இஸ்லாமியர் மத்தியில் வந்தது எப்படி என்று ஆதாரத்துடன் ஜம்மியத்துல் உலமாவின் 'பத்வா' குழுவினரிடம் விளக்கம் கேட்க விரும்புகிறேன்.
இது சம்பந்தமான ஆழமான ஆய்வோன்றுக்கு நான் தயார்.
தாலிபான்களும், மாலி போராளிகளும்,அல் கைதா போராளிகளும் இஸ்லாமியப் போராளிகள் இல்லை என்பதை இவ்விடத்தில் தெளிவு படுத்த சந்தர்ப்பம் அளித்த 'jaffna muslim.com' குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
sumaiya அவர்களின் கவனத்திற்கு,
ReplyDeleteஇஸ்லாத்தின் மூலாதாரங்கள் குர் ஆனும், ஹதீசுமாகும்.
நபி சல்லல்லாஹு அளைஹிவசல்லம் அவர்களின் காலத்தில், திருமணமாகி, அதன் பின்னர் விபச்சாரத்தின் மூலம் குழந்த பெற்ற பெண்ணுக்கு, கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட
சம்பவம் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. ஆகவே அது நமக்குப் போதுமானதாகும்.
திருமணமாகாதவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டால், கசையடி வழங்கப்படும்.
திருமணம் செய்து, அதன் பின்னர் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை கல்லெறிந்து கொல்லுவது, திருடியவர்களின் கையை வெட்டுவது போன்ற தண்டனைகளை ஷீயாக்கள் குர் ஆனில் வரவில்லை எனக் கூறி ஏற்றுக் கொள்வதில்லை.
குர் ஆனையே மாற்றி வைத்துள்ள இவர்கள், குர் ஆனில் ஐந்து நேரம் தொழும்படி வரவில்லை எனக் கூறி, மூன்று நேரம் தொழுகை என்ற பெயரில் எதையோ செய்து, குனிந்து எழும்பிவிட்டு வருகின்றனர்.
(சஹாபாக்களை காபிர் எனச் சபிக்கும் ஷியாக்கள் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில்லை.)
விபச்சாரத்திற்கான தண்டனையை ஷீயாக்கள் ஏற்றுக் கொள்வதில்லை, அவர்களிடம் முத்தா என்ற பெயரில் விபச்சாரம் நடைமுறையில் உள்ளது. ஷீயா மதத்தில் விபச்சாரத்திட்கு அங்கீகாரம் உள்ளது.
ஆனால் விபச்சாரம் இஸ்லாத்தில் தடை செய்யப் பட ஒரு பெரும் பாவமாகும்.
sumaiya அவர்களே, ஷீயாக்களின் கருத்துக்கள் உள்வாங்கப் படுவது குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
பதிலுக்கு நன்றி.
ReplyDeleteஎன்னுடைய கேள்வி மிக இலகுவானது.
இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களாக அல் குர்ஆணும அல் குர் ஆணுக்கு முரண்படாத ஹதீஸ் அறிவிப்புக்களும் இருக்கின்றன என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கல்லெறி தண்டனை இஸ்லாமிய சட்டம் என்றால் அதற்கு ஆதாரமான அல் குர் ஆன் ஆயத் கட்டாயம் இருக்கவேண்டும்.
கல்லெறி தண்டனை -Honor Killing- என்ற தண்டனை முறை மத சட்டவாக்களுக்கு அப்பால் கோத்திர சட்டமாக இன்றும் நடை முறையில் இருப்பதை உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
என்னுடைய கேள்விக்கு நீங்கள் ஷியாக்களின் கருத்து என்று சொன்னது மிக ஆச்சரியமாக இருக்கிறது.
அதன்படி யார் யாரெல்லாம் இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஷியா கருத்தால் கவரப் பட்டவர்கள் என்று கூறுவது போல உங்கள் வாதம் ஒலிக்கிறது.
திருடினால் கையை துண்டிப்பதட்குரிய அல் குர் ஆண் ஆயத் ஆதாரமாக இருக்கிறது.
கையைத் துண்டிப்பது எந்த அளவில் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது சரிதான்.
ஆனால், கல்லால் அடித்துக் கொலை செய்யும் அளவுக்கு கடுமையான சட்டத்தினை அல் குர் ஆனில் காணக் கிடைக்கவில்லை என்றுதான் நான் சொன்னேன்.
அடுத்தது, விபச்சாரத்துக்கு கண்ணால் கண்ட சாட்சிகள் நால்வர்...அதுவும் சமூக அந்தஸ்த்துள்ள நால்வர் தேவை.
அப்படி இருந்தால் மட்டுமே கசையடி தண்டனைக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு.
தனி மனித உரிமைக்கு மதிப்புக் கொடுக்கின்ற இஸ்லாத்தின் மனித உரிமை மீறலான; குழந்தைக் கிடைத்ததை மட்டும் சாட்சியாகக் கொண்டு மாலை நாட்டில் நடந்த இந்த அராஜகச் செயல் புனித தீனுல் இஸ்லாத்தின் மேல் தவறான கருத்தியலை திணிக்கும் நோக்குடன் மேற்குலகின் ஆதரவுடன் இயங்கும் போராளிக் குழுக்களினால் செயல் படுத்தப் பட்டிருப்பதாகவே நான் காண்கிறேன்.
ஷியாக்களைப் பற்றியோ அவர்களது கருத்துக்களைப் பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாது.
நான் எந்த ஷியாவையும் சந்தித்ததில்லை.
ஆதலினால்,அவர்களது கருத்துக்கள் என்னைக் கவர்வதட்கு வாய்ப்புக்கள் இல்லை.
எனது கேள்வி சரளமானது.
"கல்லெறி தண்டனையைக் குறிப்பிடும் அல் குர் ஆன் ஆயத் எது?"
"கல்லெறி தண்டனையை ஆதரிக்கும் ஹதீஸ் இருந்தால் எந்த அல் குர் ஆன் ஆயத்துக்கு விளக்கமாக அந்த ஹதீஸ் அறிவிப்பு இருக்கிறது ?"
என்னுடைய நாயன் அல்லாஹ் அருளிய அல் குர் ஆன் ஆதாரங்களை குறிப்பிட்டு விளக்கம் தருமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களாக அல் குர்ஆனும், சஹீகாண ஹதீஸ்களும் இருக்கின்றன என்பதே சரியாகும். சஹீகாண ஹதீஸ்கள் அல் குர் ஆணுடன் முரண்படாது என்பதனை விளங்கிக் கொள்ளுங்கள்.
ReplyDeleteநீங்களே சொல்லுகின்ற படிக்கு, ஷீயாக்களின் கருத்துகளால் பதிக்கப் படாத நிலையிலும் கூட, நபியவர்களால் வழங்கப் பட்ட இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனை முறையொன்றை, ''காட்டுமிராண்டித் தனமானது, honor killing , கோத்திரவாத - இஸ்லாத்திகு முரணான தண்டனை'' என்றெல்லாம் குறிப்பிட்டதை எண்ணி மிக்க வேதனையடைகின்றேன். (நஊது பில்லாஹி மின்ஹா)
உங்களுக்கான ஹதீஸ் ஆதாரத்தை உரிய அறிஞர்களைத் தொடர்பு கொண்ட பின்னர் வழங்குகின்றேன், இன்ஷா அல்லாஹ்.
அதற்கு முன்னர் மிக முக்கியமாக......
குர் ஆனும்,சஹீகாண அஹதீசும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். எல்லா சட்டங்களும் குர் ஆனில் இருந்து மட்டுமே பெறப்படுவதில்லை, அஹதீசும் சட்ட மூலாதாரமே. நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் ஒரு விடையத்தை சொன்னார்கள், செய்தார்கள், அங்கீகரித்தார்கள் என்றால், அதுவும் ஆதாரமாகக் கொள்ளப்படும்.
எல்லா ஹதீஸ்களுமே, ஏதாவது குர் ஆன் ஆயத்திற்கு விளக்கமாக மட்டும்தான் வந்திருக்க வேண்டும் என்ற வாதம் இஸ்லாத்தில் இல்லை.
நீங்கள் இவற்றிற்கு உடன்படுவீர்கள் என நம்புகின்றேன்.
ITUNES ENNA LA VOIX KADAYAI THIRANTHU AWARE PURCHASE PANNUKKIRARU AWARDING AADU KALAMAAKA MAARIVIDDATHU AWARAI SKYPE VIVATHATTUKU ALAIKINROM
ReplyDelete@ sumaiya
ReplyDeleteஉங்களுக்கான பதில்.
திருமணம் செய்யாதவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டால் 100 கசையடி வழங்க வேண்டும்.
திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லப் பட வேண்டும் என்பதனை அஹதீஸிலிருந்து சுருக்கமாக
பார்த்து, குர் ஆனின் மூலம் உறுதிப் படுத்திக் கொள்ளுவோம்.
அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தான் விபச்சாரம் செய்ததாக ஒப்புக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மீண்டும் கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். முடிவில் நான்கு தடவை தனக்கு சாட்சியம் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உமக்கு பைத்தியம் ஏதும் பிடித்துள்ளதா?' என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நீர் மணமுடித்தவரா? என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதன் பின் நபி (ஸல்) அவர்கள் கல்லெறியுமாறு கட்டளையிட முஸல்லா என்ற இடத்தில் கல்லெறியப்பட்டார். கல்லெறி விழுந்ததும் அவர் ஓடலானார். பிடிக்கப்பட்டு மீண்டும் கல்லெறியப்பட்டு மரணித்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் புகழ்ந்துரைத்தார்கள். அவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்கள்: புகாரி, திர்மிதி 1451)
மேலும் பார்க்க புகாரி : 2649 , 6836 , 6843 , 7195 , 2315 , 5272 , 6829 , 6824 , 6812 , 6815 , 6820 , 6828 , 2649 , 2696, 5270.
மேற்படி சட்டத்தை உறுதிப் படுத்தும் அல் குர் ஆனின் வசனங்கள்.
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்'' (அல்குர்ஆன் 5:44)
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்'' (அல்குர்ஆன் 5:45)
''எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள்'' (அல்குர்ஆன் 5:47)
அல்லாஹ்வின் தூதர் ஒரு பொழுதுமே நிராகரிப்பாளராகவோ, அநியாயக்காறராகவோ, பாவியாகவோ இல்லை.
அவர் அல்லாஹ்வின் கட்டளைப் படியேதான் கல்லெறி தண்டனை வழங்கியுள்ளார் என்பதனை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
கீழுள்ள ஹதீசையும் காண்க.
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை. அவை: 1. திருமணமானவன் விபச்சாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. ஜமாஅத்தை விட்ட (தேச துரோகமும் மார்க்க விரோதமும் செய்த)வன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல்கள் - புகாரி 6878, முஸ்லிம் 3463. 3464, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)
உங்களது பதிலுக்கு நன்றி .
ReplyDeleteநான் இஸ்லாத்துக்கு எதிரானவள் அல்ல.
இஸ்லாத்தின் பெயரால் நடைபெறுகின்ற அநீதமான செயல்களுக்கு எதிரானவள் .
விபச்சாரத்துக்கு தண்டனையாக மண்ணிலே நட்டு கல்லெறிந்து கொலை செய்வதை நபிகளார் அனுமதித்தார்கள் எனபது நபிகளாரின் பெயரில் இட்டுக் கட்டப் பட்ட ஹதீஸாக இருக்கலாம் எனபது எனது வாதமாகும்.
ஏனெனில் திருட்டு என்றதனிமனித உரிமை மீறலுக்கு கையைத் துண்டிக்குமாறு குர்ஆண் சொல்லியிருக்க கல்லெறிந்து கொலை செய்ய அனுமதிக்கும் ஒரு தவறு சம்பந்தமாக குர்ஆனில் எதுவுமே சொல்லப் படவில்லை எனபது ஆச்சரியமானது .
ஆதலினால்தான் கல்லெறிந்துக் கொலை செய்வதற்கான குர்ஆண் ஆதாரத்தை கேட்கிறேன்.
இது தவிர இனைவைப்பைத் தவிர ஏனைய அனைத்துக் குற்றங்களையும் எனது அல்லாஹ் மன்னிப்பதாக எனது நபிகளார் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தயாளசிந்தையையும் நபிகளாரின் நடத்தையையும் கேள்விக்குறியாக்கும் செய்கை கல்லெறி ஹதீஸ்களில் இருப்பதால்தான் கல்லெறி தண்டனைக்கு ஆதாரமான குர்ஆண் ஆயத் எது என்று கேட்கிறேன்
நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteஇஸ்லாத்திற்கு எதிரானவள் அல்ல என்று வார்த்தையில் மட்டும் சொல்லிவிட்டால் போதாது, செயலிலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
ReplyDeleteமேற்படி ஹதீஸ் இட்டுக் கட்டப் பட்டதாக இருக்கலாம் என்று நீங்கள் கருதுவதால் மட்டும் அப்படி ஒருபொழுதும் ஆகி விடப் போவதில்லை.
மேற்படி விடையத்தைப் பற்றிப் பேசும் ஏராளமான சஹீகாண ஹதீஸ்கள், வெவ்வேறு அறிவிப்பாளர் தொடர்களுடன் காணப்படுகின்றன. இட்டுக் கட்டப்பட்டதாக இருக்கலாம் என வாய் கூசாமல் சொல்லும் நீங்கள், வெறுமனே சொல்லாமல், அனைத்து ஹதீஸ்களையும் உசூல் ஹதீஸ் அடிப்படையில் தரப்படுத்த வேண்டும்.
உங்கள் கற்பனைகளும், உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொண்ட போலி நீதி நியாயங்களும் மார்க்கம் ஆகிவிட முடியாது.
1400 வருடங்களாக நேர்வழி வந்த எந்த அறிஞரும் குறை காணாத ஒரு விடையத்தை, இன்று வந்து நீங்கள் குறை காண்பது என்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
இணைவைப்பைத் தவிர ஏனைய அனைத்துக் குற்றங்களையும் எனது அல்லாஹ் மன்னிப்பதாக எனது நபிகளார் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தயாளசிந்தையையும் நபிகளாரின் நடத்தையையும் கேள்விக்குறியாக்கும் செய்கை கல்லெறி ஹதீஸ்களில் இருப்பதாக கூறி அல்லாஹ்வின் வஹியையும், நபிகளாரின் வழிகாட்டலையும் சந்தேகம் கொள்ளும் உங்கள் மனது, இதே காரணத்தைக் கூறி திருடனின் கையை வெட்டுவது, கொலைகாரனினதும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவனினதும் கழுத்தை வெட்டுவது, கசையடி வழங்குவது, கத்னா செய்வது, பெண்கள் இத்தா இருப்பது, மாதவிடாயும் பிரசவ வேதனையும் பெண்களுக்கு மட்டும் வருவது போன்றவற்றையும் சந்தேகம் கொள்ளுமா?
அல்லாஹ்வின் மார்க்கத்தை, மிகச் சிறந்தவர்களான சஹாபாக்கள் விளங்கிய அடிப்பையில் விளங்க முயலுங்கள், உங்கள் சொந்த புத்தியின் அடிப்படையில் மட்டும் விளங்க முயலாதீர்கள். மார்க்கத்தின் அடிப்படி அறிவில்லாத நிலையில், உங்கள் சொந்தப் புத்தியை மட்டும் வைத்துக் கொண்டு எதாவது ஒரு விடையத்தை விளங்க முற்பட்டால், விகாரமான முடிவுகளே வரும் என்பதற்கு நீங்களே ஒரு நல்ல உதாரணம். இதே தவறை மீண்டும் செய்யாமல் இருங்கள்.
சந்தேகங்கள் இருந்தால், மேல் உள்ள பதிலையும் மறுபடி வசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விதண்டாவாதத்தில் ஈடுபட்டால், உங்களுக்கு பதிலளிக்காமல் விடுவது குறித்து அல்லாஹ் குற்றம் பிடிக்க மட்டான்.
அல்லாஹ் உங்களை மன்னித்து நேர்வழியைக் காட்டட்டும்.