'டயர்டாக' இருக்கிறது என்று இதுவரை ஒருமுறைகூட நான் சொன்னதில்லை
ஜப்பானை சேர்ந்த 106 வயது தாத்தா பஸ், ஆட்டோ உள்ளிட்ட பப்ளிக் வாகனங்களில் மட்டுமே பயணம் செய்து உலகம் சுற்றி வருவதாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் புகோகா பகுதியை சேர்ந்தவர் சபுரோ ஷோச்சி. வயது.. சென்சுரி போட்டு 6 ஆண்டுகள் ஆகிறது. 106 வயதில் உலகின் பல்வேறு நாடுகளை வலம் வந்து அதிக வயதில் நீண்ட பயணம் செய்தவர் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். புகோகா பல்கலையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சபுரோ. பணிக்காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது 106வது பிறந்தநாளை விமரிசையாக, வித்தியாசமாக கொண்டாடினார். பர்த்டேயை முன்னிட்டு பல்வேறு நாடுகளுக்கு ஒரு மாத கால சாதனை பயணம் மேற்கொண்ட அவர் பிறந்தநாளன்று புகோகா வந்தடைந்தார். நண்பர்கள், உறவினர் என ஏராளமானோர் புகோகா ஏர்போர்ட்டில் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சாதனை பயணம் குறித்து சபுரோ கூறியதாவது,
சாதனை பயணம் குறித்து சபுரோ கூறியதாவது,
இயல்பாகவே, ஒரே இடத்தில் இருப்பது எனக்கு பிடிக்காது. எங்காவது சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவேன். 100 வயதுக்குள் 56,700 கி.மீ. தூரம் சென்றேன். பிறந்த நாள் ஸ்பெஷல் டூரின்போது கார், வேன் ஆகியவற்றை பயன்படுத்தவில்லை. பஸ், ஆட்டோ போன்ற பப்ளிக் வாகனங்களில் மட்டுமே சென்றேன். கடந்த ஜூலை 16ம் தேதி தொடங்கி கனடா, பல்கேரியா, தென்ஆப்ரிக்கா என பல்வேறு நாடுகள் சுற்றினேன். கடவுள் அருளால் மேலும் பல பயணங்கள் செல்வேன் என்ற நம்பிக்கையும் ஆசையும் உள்ளது. எத்தனை ஊர், எத்தனை நாடுகள் சுற்றிவிட்டு வந்தாலும், ‘‘டயர்டாக இருக்கிறது’’ என்று இதுவரை ஒருமுறைகூட நான் சொன்னதில்லை. எனக்கு பிடிக்காத வார்த்தை ‘சோர்வு’. இவ்வாறு சபுரோ கூறினார்.
Post a Comment