Header Ads



வீணான சந்தேகமும், தவறான அணுகுமுறைகளும் சமூக நல்லெண்ணத்தைக் கெடுக்கின்றன


வீணான சந்தேகமும் தவறான அணுகுமுறைகளும் தான் சமூக நல்லெண்ணத்தைக் கெடுக்கின்றன. நாம் நெருங்கிப் பழகியவர்கள். தொடர்ந்தும் நெருங்கி உறவாடி எமது சகோதரத்துவ ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என மொனராகலை பஞ்ஞாலங்கார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மகாபோதி சங்கத்தில் முதன் முறையாக நோன்பு துறக்கும் 'இப்தார்' நிகழ்ச்சி செவ்வாயன்று  நடைபெற்றது. இதன்பேது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது சமூகமும், முஸ்லிம் சமூகமும் வரலாற்றுக் காலம் முதல் நட்புறவுடன் வாழ்ந்த சமூகங்களாகும். வீணான சந்தேகமும், தவறான அணுகுமுறைகளும் தான் சமூக நல்லெண்ணத்தைக் கெடுக்கின்றன. நாம் நெருங்கிப் பழகியவர்கள். தொடர்ந்தும் நெருங்கி உறவாடி எமது சகோதரத்துவ ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.