அமெரிக்காவுக்கு பறக்கப்போகிறார் மொஹமட் முர்ஸி
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஜனாதிபதி முர்சி வொஷிங்டனில் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக மொஹமட் முர்சியின் ஊடக பேச்சாளர் யாசிர் அலி குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்திப்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அவர் கூறினார்.
எகிப்தில் ஜனநாயக ரீதியில் தேர்வான முதலாவது இஸ்லாமிய பின்னணி கொண்ட ஜனாதிபதியான மொஹமட் முர்சியின் அமெரிக்க விஜயம் தீர்க்கமானதாக கருதப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலத்தில் எகிப்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெருக்கிய உறவு காணப்பட்டது. அமெரிக்கா எகிப்துக்கு இராணுவ உதவியாக 1.3 பில்லியன் டொலர்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - tn
Post a Comment