பிரச்சினைக்கான தீர்வை காண ஜப்பான் ஒத்துழைக்கும் - ஹக்கீமிடம் அகாஷி உறுதி
நூர் ஷிபா
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் அதற்கான விஷேட நீதிமன்றங்கள் ஊடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அவற்றுக்கான தீர்வு வெகுவிரைவில் காணப்படவிருப்பதாக ஜப்பானிய விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது நீதிமையச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் அதற்கான விஷேட நீதிமன்றங்கள் ஊடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அவற்றுக்கான தீர்வு வெகுவிரைவில் காணப்படவிருப்பதாக ஜப்பானிய விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது நீதிமையச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள ஜப்பானின் விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (22) பிற்பகல் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்;டிருந்த போதே அவர் இதனைக் கூறினார்.
இச் சந்திப்பில் இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதுவர் நொபுஹிடோ ஹோபோ, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரியர் எட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோர் உட்பட ஜப்பானிய தூதுக்குழுவினரும் பங்குபற்றினர்.
யசூசி அகாஷியுடனான விஷேட சந்திப்பிற்காக, கிழக்கில் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒரு நாள் இடைநிறுத்திவிட்டு அமைச்சர் ஹக்கீம் புதன் கிழமை அதிகாலையில் கொழும்பு திரும்பியிருந்தார்.
அகாஷியுடனான கலந்துரையாடலின் போது, நீதியமைச்சர் என்ற முறையில் சிறையிலுள்ள கைதிகள் விஷயத்தில் தாம் அதிக கரிசனை காட்டி வருவதாகவும், தேங்கியுள்ள வழக்குகளை தாமதமின்றி துரிதமாக விசாரித்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அமைச்சர், இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்காக அர்ப்பணிப்போடு செயற்படக் கூடிய மூன்று நீதிமன்றங்களை அமைக்கப்படுவது பற்றியும் எடுத்துரைத்ததோடு வெலிக்கடை சிறைச்சாலைக்குள்ளேயே இதற்கான நீதிமன்றம் ஒன்றை அமைப்பதன் சாத்தியப்பாடு பற்றியும் விபரித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களம் தமிழ் கைதிகள் பற்றிய ஆவணங்கள் அடங்கிய கோவைகளை நன்கு பரிசீலித்து வருவதாகவும் அதற்கென பிரத்தியேகமான அரச சட்டத்தரணிகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
எல்ரீPரீஈ சந்தேக நபர்களான கைதிகள் மறுவாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்படுவது பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் அவர் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தாமதங்கள் பற்றியும் யசூசி அகாஷி வினவினார். அது சம்பந்தமாக அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும், தமது நீதியமைச்சோடு தொடர்புடைய விஷயங்களை அதை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். அது தொடர்பில் கொண்டுவரப்படும் சில சட்டங்களின் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கிக் கூறினார்.
இராணுவ மயப்படுத்தல் பற்றிய குற்றச்சாட்டுகள், பாதுகாப்பு காரணிகள் போன்ற அம்சங்களும் கலந்துரையாடலுக்கு உட்பட்டன.
முஸ்லிம்கள் பற்றிய விவகாரம்
இனப்பிரச்சினைத் தீர்வில் இன்றியமையாத முஸ்லிம்களின் பரிமாணம் பற்றியும் அமைச்சர் மீண்டும் இலங்கைக்கு பலவிடுத்தம் வந்து, தம்மிடம் உரையாடிச் சென்ற, அகாஷியிடம் மீண்டும் வலியுறுத்தினார்.
தமது பூர்வீக வதிவிடங்களில் மீள்குடியேறி வரும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறிப்பாக அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், இழப்பீடுகள், நிவாரணங்கள் என்பனவற்றின் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் யுத்த சூழ்நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணித்துக்கொடுக்கப்படும் ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கும் போதியளவு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதன் தேவை குறித்து தாம் இங்குள்ள இந்திய தூதுவருடன் வலியுறுத்தியுள்ளதையும் அமைச்சர் ஹக்கீம் நினைவூட்டினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இனப்பிரச்சினைக்கு மேலும் காலதாமதமின்றி சகல தரப்பினரையும் திருப்திப்படுத்தக் கூடியவரான தீர்வு விரைவில் காணப்படுவது காலத்தின் தேவை என்பதை அமைச்சர் யசூசி அகாஷியுடன் மிகவும் அழுத்தமாக மீண்டும் வலியுறுத்தினார்.
அமைச்சர் ஹக்கீம் இலங்கையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் முன்னரும் பலமுறை அவரது வேண்டுகோள்களுக்கும், அபிப்பிராயங்களுக்கும் தாம் கூடிய கரிசனை செலுத்தியிருப்பதாகவும், இந்த விஜயத்தின் போது அவர் முன்வைத்த முக்கிய அம்சங்களை தாம் ஜப்பானிய அரசாங்கத்தினதும், அதனூடாக சர்வதேச சமூகத்தினதும் கவனத்திற்கு கொண்டு வந்து பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகளைக் காண ஒத்துழைப்பதாகவும் விஷேட தூதுவர் யசூசி அகாஷி உறுதியளித்தார்.
Post a Comment