Header Ads



யாழ்ப்பாணத்தில் நெருப்புக் காய்ச்சல் பற்றி சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரிக்கை


யாழ்ப்பாணத்தில் நெருப்புக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், கடந்த பத்து நாட்களில் நெருப்புக் காய்ச்சல் நோயாளர்கள் 11 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

பரவி வரும் நெருப்புக் காய்ச்சலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, வேலணை, புங்குடுதீவு பகுதிகளில் பரவிவரும் நெருப்புக் காய்ச்சலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் முறை பற்றி  மக்களுக்கு விழிப்பூட்டி வருகின்றது.

பாதுகாப்பான குடிநீரை (கொதித்தாறிய) பருகுதல்,  குழந்தைகள், பெரியவர்கள் அனைவரது பாதுகாப்பான மலசலகூடங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இதன்மூலம் வேகமாகப் பரவி வரும் நெருப்புச் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் சுகாதார நிலையம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது.

உணவுப் பொருட்களை சமைத்தவுடன் உண்ணுதல், மற்றும் உணவுப் பொருட்களை மூடி வைத்து பாவித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் இந்த நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் சமைக்காது உண்ணும் உணவுப் பொருட்களை எப்போதும் நன்றாக உப்பு நீரில் கழுவிய பின்னர் உண்ணவேண்டும் எனவும் சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.