ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் இல்லை
AD
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை, நீதி அமைச்சர் பதவியை இராஜனாமா செய்யுமாறு கட்சியின் உயர் மட்டக்குழு அழுத்தம் கொடுப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அமைச்சு மட்டத்தில் இவ்வாறனா கருத்துக்கள் பேசப்பட்டு வருவதாகவும், ரவூப் ஹக்கீமை இராஜனாமா செய்யுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கூறப்படும் கருத்துக்கள் உண்மை இல்லை எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.
அரசின் எந்த பதவியையும் துறந்து மாகாணசபை தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அவர் கூறினார். எனினும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் ஷேகுதாவூத், தான் தேர்தலில் முழு ஒத்துழைப்பை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்குவதற்காக பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா பெற்றதாக அறிவித்திருந்தார்.
Hakeem is dir-ecting , Basheer is acting, media is re- acting. But people will be rej-ecting all of them at the election!
ReplyDeleteகடந்த காலங்களில் எவ்வாறு தமிழ் தேசியம் சார்ந்த மீடியாக்களும்,அரச சார்பு மீடியாக்களும் தத்தம் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப இந்த முஸ்லிம் காங்கிரசை பிளவுபடுத்துவதற்காக தமது கைங்கரியங்களை செய்தார்களோ இன்று அதே பணியை தொடர்கின்றார்கள். கட்சிக்குள் இருந்தவர்களை பெரும் ஜாம்பவான்களை இவர்களே சித்தரித்துக் காட்டினார்கள். இன்று அந்த வரிசையில் கடைசியாக நிற்பவர் பசீர் சேகு தாவூத்.
ReplyDelete