மியன்மார் முஸ்லிம்கள் இன அழிப்பு - நிலைமையை ஆராய துருக்கி அதிகாரிகள் விரைவு
ரோஹிங்கியா முஸ்லிம்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு பலிகடாக்களாக மாறியுள்ள சூழலில் பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரப்பூர்வ தலையீட்டைக் கோரி துருக்கி நாட்டு தலைவர்கள் மியான்மர் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவும், பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனாவும் நேற்று முன்தினம் மியான்மருக்கு புறப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சனைக்கு தீர்வு காண துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் தாவூத் ஓக்லு, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின்(ஒ.ஐ.சி) தலைவர் இக்மலுத்தீன் இஹ்ஸானுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் மியான்மரில் துருக்கி தூதரகம் திறக்கப்பட்டிருந்தது. துருக்கி தூதர் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயர் துடைப்பு முகாமிற்கு சென்று பார்வையிட்டதாகவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
muslim ummath oru udampiporathu udampil engu wali eduthalum
ReplyDeletemulu udampiyum pathikum turuki mindum islamiya kilafawi nilainata
muyatchikurathu.ya allah melum awarhaludiya pathiye uruthiyakuwayaha
எகிப்து, துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள், உலக முஸ்லிம்களின் நலனுக்காக முன்வந்து செயல்பட வேண்டும். அதற்குரிய தைரியத்தையும், வளங்களையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
ReplyDeleteஇந்தப் பட்டியலில் லிபியாவும், புரட்சியின் வெற்றிக்குப் பின்னரான சிரியாவும்,இன்ஷா அல்லாஹ் இணைந்து கொள்ள வேண்டும்.