வீடுகளில்கூட சுதந்திரமாக தொழ முடியாத நிலையேற்படும் - எச்சரிக்கிறார் முஜீபுர் ரஹ்மான்
புத்த சாசன அமைச்சு முஸ்லிம்களின் மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லையென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
5 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் தாருல் அக்ரம் மத்ரசாவை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது. குறித்த மத்ரசா அமைந்திருக்கும் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் இந்த மதரஸாவில்தான் தொழுகை கடமைகளை நிறைவேற்றுகிகன்றனர். இங்கு ஒலிபெருக்கிகூட பயன்படுத்தப்படுவதில்லை.
நிலைமை இவ்வாறு தொடருமானால் வீடுகளில்கூட சுதந்திரமாக தொழமுடியாத நிலை உருவாகும். எனவே முஸ்லிம்கள் இதற்கெதிராக அணிதிரள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் தனது கட்சி அரசியல் நலனுக்காக முஸ்லிம்களை வீணாக உசுப்பேற்றி, அதில் குளிர் காய முயலக் கூடாது. பிரச்சினையை உரிய முறையில் அணுக வேண்டுமே தவிர, வீணாக ஊதிப் பெரிதாக்கவோ, மக்களை அச்சத்தில் ஆழ்த்தி அரசியல் ஆதாயம் தேடவோ முயலக் கூடாது.
ReplyDeleteகுறித்த மதரசாவில் தொழுகை நடத்துவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து யாரும் இதுவரை தெளிவு படுத்தாது ஏன்? அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்துவதை விட்டுவிட்டு, 'முஸ்லிம்கள் வீடுகளில் கூட சுதந்திரமாக தொழ முடியாத நிலை உருவாகும்' என்று ஊத்தி பெரிதாக்கக் கூடாது.
பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது என்பது சில அரசியல்வாதிகளுக்கு தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான 'ஒட்சிசன்' ஆக பயன்படுகின்றதோ என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. 'அடுத்த பள்ளிவாசல் எப்பொழுது தாக்கப்படும், எவ்வாறு அறிக்கை விட்டால் உச்சபட்ச அரசியல் லாபம் அடையலாம்' என்று சில அரசியல் வாதிகள் காத்திருக்கின்றார்கள் போலும்.
வீணாக இந்த சந்தேகங்களை எழுப்பவில்லை.
வடக்கு கிழக்கிற்கு வெளியே பள்ளிவாசல்கள் மீது கல் விழுந்தாலே அறிக்கை விட்டு ஆதாயம் தேடுபவர்கள், உன்னிச்சையில் தீக்கிரையாக்கப் பட்ட பள்ளிவாசல் குறித்தோ, பிரம்மகுமாரிகள் தியான நிலையமாக மாற்றப் பட்டுள்ள கல்வியங்காடு பள்ளிவாசல் குறித்தோ,
யாழ்பாணம் ஐதுரூஸ் மகாம் வீதியில் 22 வருடங்களாக பாழடைந்து போயிருக்கும் பள்ளிவாசல் குறித்தோ இதுவரை எதுவுமே செயாதது, பேசாதது ஏன்?
குறித்த பட்சம் மன்னர் உப்புக்குளம் முஸ்லிம் மக்களுக்ககவாவது ஏதாவது செய்தார்களா?
வடக்கு கிழக்கில் உள்ள பள்ளிவாசல்கள் பள்ளிவாசல்கள் கிடையாதா?
அல்லது வடக்குக் கிழக்கு பள்ளிவாசல்களைப் பற்றி பேசினால் அரசியல் ஆதாயம் கிடைக்காது என்ற நரித்தனமா?
[ *யாழ்ப்பாணம் ஐதுரூஸ் மகாம் வீதி பள்ளிவாசல் சில மாதங்கள் முன்னர் வரை பாழடைந்தே இருந்தது, அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டதாக எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.]
Thanks Mr La Viox,
ReplyDeleteMujibu Rahman M.P , Don't look for political gains with the situation. You are not speaking anything for Mannar Muslims. You speak everything for political gains and not for Muslims.
இவர் தற்பொழுது ஐ.தே.க முஸ்லிம் அரசியல் கோமாளிகளில் ஒருவர்.பல கொப்புகளிலும் தாவித்திருந்தவர் இறுதியல் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களை ஏமாற்ற ஒரே வழி ஐ.தே.க இல் இணைந்து மாகாண சபைக்கு சென்றுவிட்டார்.இனி அடுத்த இலக்கு பாராளுமன்றம்,அதற்காக இப்போதிருந்தே ஹீரோவாக முயற்சிக்கிறார்.
ReplyDeleteஅப்படி ஒரு நிலைவரும் முன்னர் இப்போதாவது எல்லா முஸ்லிம்களையும் மஸ்ஜிதுக்கு சென்று தொழவைக்க முயட்சி செய்யுங்கள் ஏனெனில் 90 வீததிட்கு மேட்பட்ட நம் நாடு முஸ்லிம்களை ஸுபஹ் தொழுகைக்கி மஸ்ஜிதில் காணோமாம்
ReplyDelete