Header Ads



காலியில் முஸ்லிம் குழுக்களிடையே மோதல் - பொருட்களுக்கு சேதம் - இருவர் கைது

SFM
 
காலி – கிங்தொட – கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இருதரப்புக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக குறித்த நிலையத்திற்கு தீவைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

85 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது சேதமடைந்தாக கணக்கிடப்பட்டுள்ளது.

கிங்தொட பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகவே இருதரப்புக்கும் இடையில் கருத்து முறுகல் இருந்து வந்ததாக தேசிய ஐக்கியத்திற்கான சர்வமதங்கள் கூட்டமைப்பின் இணைத்தலைவர் அல்ஹாஜ் ஹசன் மௌலான  தெரிவித்தார்..

சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிங்தொட்ட பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்துள்ளார்

4 comments:

  1. அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மக்களிடம், "இதுதான் அல்லாஹ் சொன்னது, இப்படித்தான் நபி (ஸல்) செய்தார்கள்" என்று ஆதாரபூர்வமாக சொன்னால், அதனை ஏற்றுக் கொள்ளாமல், குறைந்த பட்சம் அதனை அங்கீகரிக்காமல், அதில் சகிப்புத் தன்மை கூட இல்லாமல் தாக்கவும், வெட்டவும், தீ வைக்கவும், கொலை செய்யவும் புறப்படுகின்றனர். இந்நிலையில், அல்லாஹ்வையே ஏற்றுக் கொள்ளாத மக்கள், நமது பள்ளிவாசல்களுக்கு எதிராக வருவதில் என்ன ஆச்சரியம்?

    ReplyDelete
  2. Very bad News.

    If they all are real muslims, why can't they solve their problems according to Islam?

    Why the hell do they make all the muslims ashamed by doing stupid works?

    ReplyDelete
  3. நல்ல தைரியமான வீரர்களா இருப்பாங்க போல இருக்கே.
    தம்புல்லைல பிரச்சின நேரம் இவங்க ஏன் வரல்ல?

    ReplyDelete

Powered by Blogger.