''பிச்சை கேட்க மாட்டோம்'' அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் பதிலடி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திடமோ அல்லது அமைச்சர்களிடமோ பிச்சை கேட்கவேண்டிய அவசியம் இல்லையென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி கூறினார்.
யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக வழங்கிய சிறு செவ்வியொன்றின் போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
அரச நியமனங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் அனுப்புகின்ற கடிதங்களை நாங்கள் கசக்கி குப்பைத் தொட்டியிலே போடுவோம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளமை பாரதூரமான விடயமாகும். அவரின் கூற்று கண்டிக்கப்பட வேண்டியது. முஸ்லிம் காங்கிரஸோ அல்லது முஸ்லிம் சமூகமோ அபிவிருத்தி பிச்சைக்காக அலைந்து கொண்டிருக்கவில்லை.
முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பு, அதன் இருப்பு மற்றும் உரிமை போன்றனவே பிரதானமானது. சலுகைகளுக்காக அலைந்துகொண்ருக்கும் கூட்டமல்ல நாங்கள். இதனை சம்பந்தப்பட்ட அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். சில முஸ்லிம் அரசியல்வாதிகளை இந்த சிங்கள் அரசியல்வாதிகள் அடையாளம் கண்டுவைத்துள்ளார்கள். அந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் போன்றுதான் முஸ்லிம் காங்கிரஸ் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த நோக்குடனும், முஸ்லிம் சமூகத்தின் மேம்பட்டுக்காகவும் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தனது இலக்கிலிருந்து விலகிச்செல்லாது.
அரச நியமனங்கள் என்பது தனிப்பட்ட ஒரு அமைச்சரின் அல்லது தனிப்பட்ட ஒரு கட்சியின் வீட்டுரிமை பொருள் அல்ல. உரியவகையில், உரிய முறைப்படி வழங்கப்படுவதுதான் அரச நிமயமனங்களாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் அனுப்புகின்ற கடிதங்களை நாங்கள் கசக்கி குப்பைத் தொட்டியிலே போடுவோம் என அமைச்சர் சரத் அமுனுகம சொல்லியிருப்தன் மூலம் அவர் முஸ்லிம் காங்கிரஸினை மாத்திரம் தூற்றவில்லை. முஸ்லிம்களின் அரசியல் அபிஷைகளைக்கூட தூற்றியுள்ளதாக பொருள் கொள்ளமுடியும். முஸ்லிம்கள் குறித்து இந்த அரசாங்கமும், அமைச்சர்களும் கொண்டிருக்கும் சிந்தனைப்போக்கையே இது வெளிக்காட்டுகிறது எனவும் ஹசன் மேலும் கூறினார்.
அதேவேளை பசீர் சேகுதாவூத் விவகாரம் தொடர்பில் கருத்துரைத்த ஹசன் அலி,
பசீர் சேகுதாவூத் வெளிப்படுத்தியுள்ள கூற்றுக்கள் தொடர்பில் முழுக்கவனமும் செலுத்த முடியாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. எமது தற்போதைய நோக்கமெல்லாம் கிழக்கு தேர்தல் தொடர்பானதுதான். இதன் அர்தம் பசீருடைய கூற்றுக்களுடன் உடன்படுவது என்றாகிவிடாது. அதுகுறித்து நாங்கள் ஆராய்வோம்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பசீர் சேகுதாவூத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி செயலாளர் என்றவகையில் எனக்கும் அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த விவகாரம் தலைவர் மட்டத்திலேயே உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தனிநபர் சார்ந்த கட்சியல்ல. தனிநபர் விவகாரம் எமக்கு பிரதானமும் அல்ல. எவர் கட்சியை விட்டு விலகினாலும் கட்சி இருந்துகொண்டே இருக்கும். இதை அழிக்கமுடியாது. இது பசீர் சேகுதாவூத் உள்ளிட்ட சகலருக்கும் பொருந்தும் என்றார்.
இந்த அமைச்சருக்கான சரியான பதில் முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டு முஸ்லிம் காங்கிரசை ஆதரிப்பது தான்.. இதை கிழக்கு மாகான மக்கள் செய்வார்கள் என்று திடமாக நம்புகிறோம்..
ReplyDeleteஇந்த தேர்தலை உலகம் மிகவும் உன்னிப்பாக கவனித்துகொண்டு உள்ளது.. எனவே முஸ்லிம்களின் தன்மானமும் அரசியல் அங்கீகாரமும் இந்த தேர்தலின் முடிவிலே தங்கி உள்ளது. எனவே முஸ்லிம்களே ஒன்றுபடுங்கள் மரத்துக்கு வாக்களியுங்கள்.. அல்லாஹு அக்பர் ...