அரபு, ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை பெருநாள் - இலங்கையில் நானை பிறை பார்ப்பு
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை, 19 ஆம் திகதி அரபு, ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில் பிறை தென்படவில்லையெனவும், இதையடுத்தே ரமளான் மாத நோன்பை 30 ஆக பூர்த்திசெய்ய மேற்குறித்த நாடுகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை மேற்குறிப்பிட்ட நாடுகளில் இவ்வருடத்திற்கான இறுதி நோன்பு எனவும், ஞாயிற்றுக்கிழமை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நாளை சனிக்கிழமை இலங்கையில் தலைப்பிறையை பார்ப்பதற்கான கூட்டம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
இவர்கள் வெள்ளிக்கிழமை ஷவ்வால் தலைப்பிறையைத் தேடினார்கள் என்பது நகைப்புக்குரியது. ஷவ்வாலுக்கு முந்திய அமாவாசை மக்கா நகருக்கு வெள்ளிக்கிழமை சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் இரவு 8.06 க்குத்தான் இடம்பெற்றது. அத்ததோடு வெள்ளிக்கிழமை சூரியன் மறைவதற்கு 19 நிமடம் இருக்கையிலேயே சந்திரன் மறைந்துவிட்டது. அதாவது சூரின் மறைகின்றபோது வானில் சந்திரன் இல்லை. அத்தோடு சூரியன் மறைகின்ற போது அமாவாசைகூட ஏற்படவில்லை. ஆனாலும் அன்றைய தினம் வெள்ளிக் கிழமை அவகளுக்கு றமழான் 29. எனவே அவர்கள் பிறையைத் தேடினார்கள். இயற்கையாக நடப்பு மாதம் மாதம் முடிவதற்கு முன்னரே புதிய மாதத்தைத் தேடியிருக்கின்றார்கள்.
ReplyDeleteஅவர்கள் சரியான தினத்தில் றமழானை ஆரம்பிக்கவில்லை என்பதுதான் இதற்கான காரணம். ஏனெனில் அவர்கள் றமழனைச் சரியான தினத்தில் ஆரம்பித்திருந்தால் ஷவ்வால் முதல் நாள் அதாவது ஈத் தினத்தின் மாலையில் தெளிவான பெரிய பிறை தென்பட வேண்டும். உங்களின் உறவினர் யாராவது மத்திய கிழக்கில் இருந்தால் சனிக்கிழமை (பெருநாள்) மாலை பிறை தென்படுகின்றதா எனப் பார்க்கச் சொல்லி தென்பட்டதா என விசாரியுங்கள். இன்று சனிக்கிழமை மக்காவில் சூரிய அஸ்த்தமனத்தின் போது 1.31 வீத பிரகாசத்துடன் 22 நிமிடங்கள் மாத்திரம் வானில் இருக்கும் சந்திரன் பிறையாக வெற்றுக் கண்களுக்குத் தெரியப்போவதில்லை. இன்ஷா அல்லாஹ். இது ஒன்றே போதும் றமழான் ஒருநாள் முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு ஒருநாள் முன்னதாகவே முடிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு ஆதாரமாகும்.
இது சஊதியிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வரும் உம்முல் குறா அமாவாசை நாட்காட்டியினால் ஏற்பட்ட வழுவாகும்.
ஹி 1429ம் ஆண்டு துல்ஹஜ் மாதத்தில் மத்திய கிழக்கில் 31 நாட்கள் வந்ததும் இதனால்தான். பார்க்க http://www.icoproject.org/icop/muh29.html
இலங்கையில் ஷரீஆவின் அடிப்படையில் இன்று பிறை பார்க்கும் நாள் என்பது வானியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். ஆனால் சஊதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிறை பார்த்தது வானியல் ரீதியாக ”முட்டாள் தனம்” ஆனதாகும்.
ஹிஜ்ரி 1433 ஷவ்வால் தலைப்பிறை எவ்வாறு அமையப்போகின்றது…
ReplyDeleteஇலங்கை
இவ்வருடம் றமழான் மாதத்தை ஜூலை 21ம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்தோம். அதன்படி ஆகஸ்ட் 18ம் திகதி சனிக்கிழமை றமழான் 29ம் நாளாகும். இத்தினம் ஷவ்வால் தலைப்பிறை பாக்கவேண்டிய நாள் என்பது நாம் அறிந்தது.
ஷவ்வாலுக்கு முந்திய இலங்கைக்குரிய புவிப்பரப்பு ஒருங்குகை (அமாவாசை) ஏற்படுவது இலங்கை நியம நேரப்படி 17ம் திகதி வெள்ளிக் கிழமை இரவு 10.07 மணிக்காகும்.
அமாவாசையைத் தொடர்ந்து வரும் அந்திப் பொழுதான 18ம் திகதி சனிக்கிழமை சூரிய அஸ்த்தமனம் கொழும்பில் 06.24 க்கு ஏற்படுகின்றது. சந்திர அஸ்த்தமனம் 06.51 க்கு ஏற்படுகின்றது. அதாவது சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் சந்திரன் 27 நிமிடங்கள் வரை வானில் இருக்கும்.
சூரிய அஸ்த்தமனத்தின் போது அமாவாசையின் பின்னான சந்திரனின் வயது 20 மணித்தியாலங்களும் 17 நிமிடங்களுமாகும்.
சூரியன் அஸ்த்தமிக்கின்றபோது சந்திரனானது மேற்குத் தொடுவனிலிருந்து 5 பாகை 39 கலை 31 விகலை உயரத்தில் நிலைகொண்டிருக்கும். மேலும் சூரிய அஸ்த்தமனத் தானத்துக்கும் சந்திர அஸ்த்தமனத் தானத்திற்கும் இடையிலான கோண வேறுபாடு 10 பாகை 27 கலை 34 விகலையாகவும் இருக்கும். அதாவது சந்திரனானது சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும்.
இதேவேளை பிறையின் தடிப்பு 19 விகலையும் பிரகாசம், முழு நிலவின் 01.01 வீதமுமாக இருக்கும். இது மிகவும் வலுக்குறைந்த பிரகாசமாகும்.
எனவே சூரியனுக்கு மிக அண்மித்ததாக இருக்கும் சந்திரனின் பிரசாக வலுக்குறைந்த பிறை விம்பமானது சூரியனின் அதீத பிரகாசத்துக்குள் மறைந்து போகும். மேலும் சந்திரனின் நிலையானது தொடுவானிலிருந்து சுமார் ஐந்தரைப் பாகை மட்டுமே என்பதனால் வளி மண்டலத் தூசு, நீராவி மற்றும் பௌதீகக் கட்டுமானங்கள் போன்றனவும் சந்திர ஒளி புவிக்கு வருவதனைத் தடை செய்யும். இதனால் 18ம் திகதி சனிக்கிழமை வெற்றுக் கண்களுக்கு இலங்கையில் தலைப்பிறை தென்படுதல் சாத்தியமற்றதாகும். ஆனாலும் தொலைநோக்கிகளுக்கு இந்தப் பிறை தோற்றம் தரக்கூடியதாகும். இன்ஷா அல்லாஹ்.
இலங்கையில் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை சந்திரனானது சூரியன் மறைந்ததிலிருந்து சந்திர அஸ்த்தமனத்திற்கு முன்னர் 1 மணித்தியாலம் 14 நிமிடங்கள் வானில் தரித்திருக்கும். சூரிய அஸ்த்தமனத்தின் போது - அமாவாசையின் பின்னான சந்திர வயது 44 மணித்தியாலங்களும் 17 நிமிடங்களுமாக இருக்கும், மேற்குத் தொடுவானிலிருந்து 16 பாகை 53 கலை 56 விகலை உயரத்தில் சந்திரன் நிலை கொண்டிருக்கும். அதாவது சந்திர – சூரிய பிரிக்கை 18ம் திகதியைவிட அதிகமாக இருக்கும்.
இதனால் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை தென்படப்போகின்ற பிறையின் கனதி அதிகமானதாகவும், பிரகாசம் முழுநிலவின் பிரகாசத்தின் 4.2 வீமானதாகவும், மேற்கு வானில் அதிகளவு நேரம் அதிகளவு உயரத்தில் தோற்றம் தருவதாகவும் இருக்கும்.
சஊதி அரேபியா
சஊதி அரேபியாவின் றமழான் 29ம் நாளான 17ம் திகதி வெள்ளிக் கிழமை மக்காவில் சூரியனுக்கு முன்னர் சந்திரன் அஸ்த்தமித்துவிடுவதனாலும், சூரியன் அஸ்த்மித்ததன் பின்னரே அமாவாசை ஏற்படுவதனாலும் அன்றைய தினம் வெள்ளிக் கிழமை தலைப்பிறை தென்பட முடியாது.
சஊதி அரேபியா – மக்கா நகரைப் பொறுத்தமட்டில் கூட 18ம் திகதி சனிக்கிழமை இலங்கை – கொழும்பு நகரை ஒத்த நிலைமையே காணப்படுகின்றது. அங்கும் இத்தினத்தில் வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படாது. எனினும் தொலைநோக்கிகளுக்கு பிறை தென்படும் சாத்தியம் உண்டு.
ஆனபோதும், சஊதி அரேபியாவிலும் அதனைப் பின்பற்றும் ஏனய நாடுகளிலும் 18ம் திகதி றமழான் 30 ஆகும். எனவே அங்கே பிறை தென்பட முடியாத போதும் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஷவ்வால் முதல் நாளாக அனுஷ்ட்டிக்கப்பட வேண்டும்.
அல்லாது சஊதியில் பிறையை எதிர்பார்த்திருந்தால் 20ம் திகதி ஷவ்வால் முதல் நாளாக வரவேண்டும். அவ்வாறு திங்கட்கிழமை ஷவ்வால் முதல் நாளாக வருமாக இருந்தால் இவ்வருடம் றமழான் மாதத்தில் 31 நாட்கள் வரும். இது அதிசயிக்கத் தக்க விடயமல்ல. ஏனெனில் ஹிஜ்ரி 1429 இல் சஊதியிலும் அதனைப் பின்பற்றும் ஏனய நாடுகளிலும் துல்ஹிஜ்ஜா மாதத்தில் 31 நாட்கள் வந்தன. பார்க்க http://www.icoproject.org/icop/muh29.html
ஆனாலும் இவ்வருட ஷவ்வால் ஆகஸ்ட் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகும் என சஊதி அரேபியாவின் உம்முல் குறா நாட்காட்டியில் குறிக்கப்பட்டாயிற்று. பார்க்க http://moonsighting.com/ramadan.html
உலகம்
வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படுதலைக் கொண்டு ஆபிரிக்கக் கண்டத்தின் தென்பகுதிப் பிரதேசங்களிலும், தென்னமெரிக்காவிலும் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஈதுல் பித்ர் ஆகவும், உலகின் ஏனய நாடுகளில் 20ம் திகதி திங்கட்கிழமை ஈதுல் பித்ர் ஆகவும் வரவேண்டும். இன்ஷா அல்லாஹ்.
ஆகில் அஹ்மத் ஷரிபுத்தீன்
ஆய்வாளர் - பிறை ஆய்வாளர் மன்றம் ஸ்ரீ லங்கா
பிறைக்குழு உறுப்பினர் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
Crescent Moon இன் பின்னூட்டம் படு முட்டாள் தனமானதும், தெளிவாகவே மார்க்கத்திற்கு முரணானதுமாகும்.
ReplyDeleteஏற்கனவே இவரின் பிழைகளை சுட்டிக் காட்டிய பின்னர், அவற்றிற்கு பதிலளிக்க லாயக்கில்லாமல், மீண்டும் வானசாஸ்திரத்தை வாந்தி எடுப்பது நகைப்பிட்கிடமானதாகும்.
http://www.jaffnamuslim.com/2012/08/blog-post_8252.html
பின்வரும் திருத்தத்துடன் இந்த comment ஐ வாசிக்கவும்
ReplyDeleteஇவர்கள் வெள்ளிக்கிழமை ஷவ்வால் தலைப்பிறையைத் தேடினார்கள் என்பது நகைப்புக்குரியது. ஷவ்வாலுக்கு முந்திய அமாவாசை மக்கா நகருக்கு வெள்ளிக்கிழமை சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் இரவு 8.06 க்குத்தான் இடம்பெற்றது. அத்ததோடு வெள்ளிக்கிழமை சூரியன் மறைவதற்கு 19 நிமடம் இருக்கையிலேயே சந்திரன் மறைந்துவிட்டது. அதாவது சூரின் மறைகின்றபோது வானில் சந்திரன் இல்லை. அத்தோடு சூரியன் மறைகின்ற போது அமாவாசைகூட ஏற்படவில்லை. ஆனாலும் அன்றைய தினம் வெள்ளிக் கிழமை அவகளுக்கு றமழான் 29. எனவே அவர்கள் பிறையைத் தேடினார்கள்.
அவர்கள் சரியான தினத்தில் றமழானை ஆரம்பிக்கவில்லை என்பதுதான் இதற்கான காரணம். ஏனெனில் அவர்கள் றமழனைச் சரியான தினத்தில் ஆரம்பித்திருந்தால் 30ம் நாள் (சனிக் கிழமை) மாலை தெளிவான பெரிய பிறை தென்பட வேண்டும். உங்களின் உறவினர் யாராவது மத்திய கிழக்கில் இருந்தால் சனிக்கிழமை மாலை பிறை தென்படுகின்றதா எனப் பார்க்கச் சொல்லி தென்பட்டதா என விசாரியுங்கள். இன்று சனிக்கிழமை மக்காவில் சூரிய அஸ்த்தமனத்தின் போது 1.31 வீத பிரகாசத்துடன் 22 நிமிடங்கள் மாத்திரம் வானில் இருக்கும் சந்திரன் பிறையாக வெற்றுக் கண்களுக்குத் தெரியப்போவதில்லை. இன்ஷா அல்லாஹ். இது ஒன்றே போதும் றமழான் ஒருநாள் முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு ஒருநாள் முன்னதாகவே முடிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு ஆதாரமாகும்.
இது சஊதியிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வரும் உம்முல் குறா அமாவாசை நாட்காட்டியினால் ஏற்பட்ட வழுவாகும்.
ஹி 1429ம் ஆண்டு துல்ஹஜ் மாதத்தில் மத்திய கிழக்கில் 31 நாட்கள் வந்ததும் இதனால்தான். பார்க்க http://www.icoproject.org/icop/muh29.html இலங்கையில் ஷரீஆவின் அடிப்படையில் இன்று பிறை பார்க்கும் நாள் என்பது வானியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். ஆனால் சஊதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிறை பார்த்தது வானியல் ரீதியாக ”முட்டாள் தனம்” ஆனதாகும்.
Dear Crescent Moon
ReplyDeleteஉங்களை விட வான சாஸ்திரத்தில் கோடி கட்டி பரந்த மக்கள் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே வாழ்ந்துள்ளார்கள். மூசா நபி பிறக்கப் போவதையும் அதன் நேரத்தையும் அவரால் பிரவுனுக்கு ஆபத்து என்றும் கணக்கு போட்டு கூறி விட்டார்கள். இப்ராகிம் நபியின் பிறப்பை பற்றியும் நம்ரூதுக்கு வான் சாஸ்திரிகள் கூறியிருந்தனர். இவை பற்றிய ஆதாரங்கள் குரான் ஹதீஸ்களில் வருகின்றன. திருக் குர் ஆணை வைத்துக் கொண்டு தான் நபியவர்கள் பிறை பார்த்து பிடி பிறை பார்த்து விடு என்று கூறினார்கள். வான சாஸ்திரப் படி பிடியுங்கள் விடுங்கள் என்று நபி கட்டளை இடத்து வான சாஸ்திரம் அந்தக் காலத்தில் இல்லை என்பத்த்காக அல்ல. மாற்றமாக உங்களில் யார் இறைக் கட்டளையை முறையாக பின் பற்றுகிறீர்கள் என்று பார்க்கத் தான்.
உங்களில் கருத்து வேருபரு இருப்பது பரக்கத்து ஆகும் என்று கூறப் பட்டதட்கு காரணம் அதுவே. பிறை சம்பந்தமாகவும் தக்பீரை எங்கே கட்டுவது என்றும் விரலை ஆட்ட வேண்டுமா என்றெல்லாம் மக்களுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகுவதன் மூலம் முஸ்லிம்கள் அதட்கான தீர்வுகளை வேத நூலிலும் ஹதீஸ்களிலும் அதன் விளக்கவுரைகளிலும் விடைகளை தேடுவார்கள். இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் எப்பொழுதும் ஒரு புத்துணர்ச்சியுடன் காணப் படும். இதன் நிமித்தமே சில கருத்து வேறுபாடுள்ள சில விடயங்கள் இஸ்லாமிய செயட்படுகளில் காணப் படுகின்றன.
ஆனால் இன்று சிலர் இந்த கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்து ஒருவரை ஒருவர் இழிவாக பேசி வசை படி கபிர் பட்டம் கொடுக்கின்றனர். கருத்து வேறுபாடுகளை வரவேட்கும் இஸ்லாம் வசை பாடுவதையும் இழிவு படுத்துவதையும் தடுக்கின்றது. இஸ்லாத்தில் கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் முஸ்லிம்களுக்கு ரஹ்மத்தை கொண்டு வரும் . புத்துணர்ச்சியை கொண்டு வரும். இஸ்லாமிய அறிவு அல் குர் ஆன் சம்பத்தப் பட்டதகினும் ஹதீஸ் சம்பந்தப் பட்டதகினும் அவை மீட்டப் படும் பொழுது அங்கு இஸ்லாமிய மத எழுச்சி உண்டாகிறது. வசை படுத்தல் இழிவு படுத்துதல் என்பன சமூகத்தின் ஒற்றுமையா பாழாக்கி சமூகத்தை சுக்கு நூறாக்கி பலஹீனப் படுத்தி விடும் .
எனவே மிஸ்டர் மூன்
சந்திர மாதங்கள் 29 அல்லது 30 நாட்களை கொண்டது என நபியவர்கள் உறுதி படுத்தியுள்ளார்கள். ஹிஜ்ரி 1429 இல் 31 நாட்கள் துள் ஹஜ் மாதத்தில் வந்ததென்பது ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. அவர்கள் அதட்கு முன்னுள்ள ஏதோ ஒரு மாதத்தில் பிறையை சரியாக கணிப்பிடிருக்க மாட்டார்கள்,. அந்த தவறு தெரிந்ததும் அதை திருத்தி விடுவது தானே முறை. இது உங்களுக்கு தெரியாத என்ன. ?
சகோதரர் Mohamed Irfan, உங்களின் கருத்துக்கள் சிறப்பாக சொல்ல பட்டுள்ளன, அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும், மேலும் மார்க்கத்தில் சிறந்த அறிவைத் தரட்டும்.
ReplyDeleteஉங்களுடைய கருத்துக்களுடன் உடன்படுகின்றேன், பின்வரும் இரண்டைத் தவிர.
1. கருத்து வேறுபாடு இருப்பது பரகத் என்று கூறப்பட்ட ஹதீஸின் தரம் குறித்து எனக்கு தெரியாது. அதில் சற்று கவனம் செலுத்துங்கள்.
2. 1429 துல்ஹிஜ்ஜா மதத்தில் 31 நாட்கள் வந்தது என்ற விடயம். Crescent Moon சொல்லுவதை மட்டும் வைத்துக் கொண்டு வெறுமனே நம்பிவிட வேண்டாம். Crescent Moon உறுதியான ஆதாரத்தைத் தர கடமைப் பட்டுள்ளார்.
Cresent moon and Mr La voix!Both comments are acceptable and this both comments writers are differents way their explanation.Good try boths and better avoids miss understanding.
ReplyDelete