ராஜகிரியவில் பள்ளிவாசல் இருந்தது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது..!
these are the mosque details: Reg. No. R/1995/C/184, Name: JAMIU DARUL IMAN Type: M Address: GROUND ROAD, OBEYSEKARAPURA , RAJAGIRIYA. For further details please visit Department of Muslim Religious and Cultural Affairs website’s following link: http://www.muslimaffairs.gov.lk/islamic_institutions/mosque_district/colombo.php on
குறித்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மற்றும் அந்தப்பள்ளியுடன் தொடர்புடைய பலருடனும் எமது இணையம் சிறந்த தொடர்புகளை கொண்டுள்ளது. குறித்த பள்ளிவாசல் விவகாரம் பற்றிய தகவல்களை இதுகாலவரையும் எமக்கு வழங்கிய அத்தனை உள்ளங்களுக்கும் நாம் நன்றி கூறுகிறோம்.
மூத்த ஊடகவியலாளர் தாஹா முஸம்மில், குறித்த பகுதியில் பள்ளிவாசல் அமைந்திருக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். இருந்தபோதும் தற்போது அந்தப் பகுதியில் பள்ளிவாசல் இருந்தமை ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரபூர்வ செய்தியை அவரும் வாசிப்பார் என்று நாம் நம்புகிறோம்.
குறித்த இடத்தில் பள்ளிவாசல் இல்லை என்ற செய்தியை வெளியிட்டமைக்காக நாம் உண்மையிலேயே வருந்துகிறோம். அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். எதிர்வரும் வாரங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த பள்ளிவாசல் தொடர்பில் ஆதராபூர்வ தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டும், சிறந்த விமர்சனங்களை முன்வைத்த உறவுகளுக்கும் எமது நன்றிகள்.
When you publish a news, you must look into the fact of the news, because I will create a lot of issues. I also shared your previous news with my friends. Most muslims believe the Jaffnamuslim news other than other websites
ReplyDeleteதேவையில்லாத குழப்பாத்திட்கு வித்திட்ட தாஹா முஸம்மில், ஒரு மூத்த ஊடகவியளாலரா? கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. ஒரு மூத்த ஊடகவியலாளர் எவ்வாறு இப்படி பொறுப்பில்லாமல் செய்தி வழங்கினார்?
ReplyDeleteஅது மட்டுமின்றி எவ்வாறு தனது தவறை ஏற்றுக் கொள்ளாமல், முன்னைய செய்தியின் பின்னூட்டம் பகுதியில் பிடிவாதம் பிடிக்கின்றார்?
யாழ் முஸ்லிம் ஆசிரியரே, குறித்த செய்தி, உண்மையாகவே மூத்த ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் அனுப்பியதா, அல்லது அவருடையது போன்ற பெயரில். போலி ஈ மெயில் கணக்கொன்றின் மூலம் அனுப்பப் பட்டதா என்பதனை உறுதி செய்துகொள்ளவும்.
சில நேரம் எனக்கு எரிச்சல் வரும் நம் முஸ்லிம் ஊடகவியளாலர்களின் தேசிய பத்திரிகளைகளில் வரும் கட்டுரைகளை பார்து குறிப்பாக தின குரல்,தினகரன் ,வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் ஒன்றுக்கும் உதவாத ஆயுவுகளையும் கருத்துக்களையுமே இவர்கள் எழுதி தள்ளுகின்றனர் அதேபோல் இபோது தேவை இல்லாமல் ஆராயாமல் இப்படி ஒரு குழப்பதை இவர் ஏட்படுத்தி இருக்கிறார் உண்மையை உலகரிய செய்து தன் தவறுக்கும் பகிறங்க மன்னிப்பு கோறி மிக நிதானமாக இந்த விடயத்தை அனுகிய ஜப்னாமுஸ்லிம் தளதின் நிர்வாகதிட்கு நன்றிகள்
ReplyDelete