Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி மஹிந்தவின் ஈத்முபாரக் வாழ்த்துச் செய்தி..!


ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய கலண்டரில் ஒரு முக்கிய தினமான இன்றைய தினத்தில் புனித அல் குர்ஆனினதும் இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையான ஒரு மாதகால நோன்பை நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினர் ஈத் பெருநாள் கொண்டாட்டங் களில் உலகெங்கிலுமுள்ள தமது சகோதர முஸ்லிம்களோடு மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கின்றனர்.

இந்த இலங்கைத் தாய்நாட்டில் வாழுகின்ற ஏனைய எல்லா சமூகங்களுடனும் ஐக்கியமாகவும் சுபீட்சமாகவும் வாழ்கின்ற இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டில் நிலவுகின்ற சமாதானச் சூழலில் அவர்களது சமயக் கடமைகளை அமைதியாக நிறைவேற்றும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருப்பதற்காக மகிழ்ச்சியடைய முடியும்.

சுபீட்சம் மற்றும் புரிந்துணர்வுமிக்கதோர் கலாசார சூழலில் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் இலங்கையின் முன்னேற்றத்திற்காகச் செய்துள்ள பங்களிப்புகளை நினைவுபடுத்துவதற்கு இதுவோர் நல்ல சந்தர்ப்பமாகும். இலங்கையின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளில் அவர்களின் தொடர்ச்சியான பங்குபற்று தலையும் பங்களிப்பையும் எதிர்பார்க் கின்றேன். இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான எனது ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்.

2 comments:

Powered by Blogger.