''தொட்டால் நோகும் தழும்புகள்'' - ஷுஹதாக்கள் தின கவிதை
உதவி - cwc
கவிஞர் காத்தூரி
சொல்லி மாளாது
உருக்குலைந்த உடல்களுக்குள்
உறவுகளைத் தேடிய கணங்களின் வலி
தியானித்திருந்த வேளையில்
திராணியற்ற கோழைகள்
முதுகுக்கு பின் குத்திய
மூர்க்கத்தின் நினைவுகளுக்கு
இன்று வயது இருபத்தியிரண்டு
உருக்குலைந்த உடல்களுக்குள்
உறவுகளைத் தேடிய கணங்களின் வலி
தியானித்திருந்த வேளையில்
திராணியற்ற கோழைகள்
முதுகுக்கு பின் குத்திய
மூர்க்கத்தின் நினைவுகளுக்கு
இன்று வயது இருபத்தியிரண்டு
கன்னத்து மச்சத்தோடும்
கனிவான புன்னகையோடும்
கனத்த கனவுகளோடும்
வகுப்பறையில் என்னருகில்
இருந்தவனே ஜஹ்பர்
உன்னை ஜன்னத்தில் இருத்திய
ஈனம் கடந்து இத்தனை ஆண்டுகளா?
கனிவான புன்னகையோடும்
கனத்த கனவுகளோடும்
வகுப்பறையில் என்னருகில்
இருந்தவனே ஜஹ்பர்
உன்னை ஜன்னத்தில் இருத்திய
ஈனம் கடந்து இத்தனை ஆண்டுகளா?
உறங்கப் போவதற்கே
உடை உடுத்தி முடிதிருத்தி
உறங்குவாயே இனாம்
உறக்கத்திலுமிருக்குமட
உன் பெயரின் அழகு (ஹஸன்)
உடை உடுத்தி முடிதிருத்தி
உறங்குவாயே இனாம்
உறக்கத்திலுமிருக்குமட
உன் பெயரின் அழகு (ஹஸன்)
சின்னப் பையன் உன்
சிரசு துளைத்த
வக்கிர வெறியாட்டத்தின் பரிசுகளை
போராட்டத்தின் மண்டை
சிதறிக்கிடந்த நாளில்
உன் தாயின் பிரார்த்தனைகளாய்
என் காதுகள் மொழிபெயர்த்தன
சிரசு துளைத்த
வக்கிர வெறியாட்டத்தின் பரிசுகளை
போராட்டத்தின் மண்டை
சிதறிக்கிடந்த நாளில்
உன் தாயின் பிரார்த்தனைகளாய்
என் காதுகள் மொழிபெயர்த்தன
கண் முன்னே நீங்கள்
குருதியாற்றில் கிடந்தீர்கள்
காணாத பல இடங்கள்
எங்கள் சொந்தங்களின் கபுறுகளாயின
கண்டு சொல்வார் யாருமுண்டே
குருதியாற்றில் கிடந்தீர்கள்
காணாத பல இடங்கள்
எங்கள் சொந்தங்களின் கபுறுகளாயின
கண்டு சொல்வார் யாருமுண்டே
கண்துடைப்பாய் உரிமைக் கோஷம்
எம் காதுகளில் மட்டும்
உரத்துச் சொல்லும்
உரிமை வீரர் எங்கே சென்றார்?
எம் காதுகளில் மட்டும்
உரத்துச் சொல்லும்
உரிமை வீரர் எங்கே சென்றார்?
மஸ்ஜிதின் சுகதாக்கள் போல்
மறைவாய் எத்தனை உயிர்கள்
ஈனர்களின் இரும்புக் கரங்களுக்குள்
பிஞ்சுகளும் பெரியவரும்
எம் நெஞ்சத்து தாய்மாரும்
தம்பிகளும் தனயனுமாய்
வஞ்சனையின் வலைக்குள்ளே
வாழ்க்கை இழந்து போனார்
அதன் கணக்கு கேட்க இன்னும்
எங்களுக்கோ திராணியில்லை.
மறைவாய் எத்தனை உயிர்கள்
ஈனர்களின் இரும்புக் கரங்களுக்குள்
பிஞ்சுகளும் பெரியவரும்
எம் நெஞ்சத்து தாய்மாரும்
தம்பிகளும் தனயனுமாய்
வஞ்சனையின் வலைக்குள்ளே
வாழ்க்கை இழந்து போனார்
அதன் கணக்கு கேட்க இன்னும்
எங்களுக்கோ திராணியில்லை.
சுகதாக்களே உம்மை நாம்
புதைக்கவில்லை விதைத்தோம்
சமுகம் வீறு கொண்டெழ
உங்கள் உத்திரங்களை உரமாக்கினோம்
என்றாலும் விருட்சங்கள் கண்டோமா?
விளங்கவில்லை எனக்கு.
உங்கள் இழப்புகளில்
எங்கள் இதயங்கள்
விடுதலை வேட்கையினை
சுமந்துகொண்டன
ஆனால் வெகுமதி பெற்றதோ
வெறும் வாய்ச்சொல் வீரர்கள்தான்
தியாகிகளே உங்களின்
உத்திரங்களை விற்று
அதிகாரங்களை வாங்கிக்கொண்டோர்
சமூகம் முன்னேறி இருப்பதாய்
நம்பச் சொல்கிறார்கள்
நம்பித்தான் ஆகவேண்டும்
புதைக்கவில்லை விதைத்தோம்
சமுகம் வீறு கொண்டெழ
உங்கள் உத்திரங்களை உரமாக்கினோம்
என்றாலும் விருட்சங்கள் கண்டோமா?
விளங்கவில்லை எனக்கு.
உங்கள் இழப்புகளில்
எங்கள் இதயங்கள்
விடுதலை வேட்கையினை
சுமந்துகொண்டன
ஆனால் வெகுமதி பெற்றதோ
வெறும் வாய்ச்சொல் வீரர்கள்தான்
தியாகிகளே உங்களின்
உத்திரங்களை விற்று
அதிகாரங்களை வாங்கிக்கொண்டோர்
சமூகம் முன்னேறி இருப்பதாய்
நம்பச் சொல்கிறார்கள்
நம்பித்தான் ஆகவேண்டும்
அன்று பள்ளிக்குள் தாக்கினார்கள்
இன்று பள்ளியையே தாக்குகிறார்கள்.
இன்று பள்ளியையே தாக்குகிறார்கள்.
Post a Comment