முதலாவது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியல் அத்தியட்சகராக முஸ்லிம் ஒருவர் நியமனம்
ஹப்றத்
மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக (எம்.எல்.ரீ) கடமையாற்றும் சம்மாந்துறையை சேர்ந்த ஏ.எம்.எம்.சலீம் என்பவர் இலங்கையின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியல் அத்தியட்சகராக அண்மையின் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நியமனம் 2010.08.02ம் திகதியிலிருந்து அமுல்படும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக 1991ம் நியமனம் பெற்று கொழும்பு மருத்துவ வழங்கல் பிரிவில் கடமையாற்றி பின்னர் 1992ல் இருந்து 1997ம் ஆண்டுவரை அம்பாறை பொது வைத்திய சாலையிலும் 1998ம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையிலும் கடமையாற்றி வருகின்றார்.
மேலும் இவர் அரசாங்கத்தின் விNஷட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2000-2001 காலப்பகுதியில் ஜப்பான் நாட்டுக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன நிறுவனத்தின் புலமைப் பரிசில் பெற்றுக் கொண்டதுடன் அரசாங்கத்தின் பல்வேறு நிபுணத்துவ தலைமைத்துவ பயிற்சிப்பட்டறைகளில் பங்கு கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நியமனம் தேசிய ரீதியில் 13 பேருக்க வழங்கப்பட்டள்ளன அவற்றில் கிழக்க மாகாணத்தை சேர்ந்தவர்கள் நான்கு பேர் இவற்றில் தமிழ் சகோதரர் ஒருவர் முஸ்லீம் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகம்.
Post a Comment