இஸட் புள்ளி விவகாரம் - மன்னிப்பு கோரியது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இஸெட் புள்ளி தொடர்பான வழக்கின் தீர்ப்பு அமுல்படுத்தப்படாமை காரணமாக நீதிமன்றம் அவமதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படும் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சத்தியக்கடதாசி மூலம் உயர்நீதிமன்றத்திடம் இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.
நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து எழுத்து மூலம் மன்னிப்பு கோருமாறு பேராசிரியர் காமினி சமரநாயக்கவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறுவதற்காக தாம் செயற்படவில்லை என சத்தியக்கடதாசி மூலம் அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்காக விசேட குழுவொன்றின் மூலம் நடவடிக்கைகளை எடுத்திருந்ததாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இஸெட் புள்ளி பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த குழு அதுகுறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அந்த செயற்பாடுகள் ஸதம்பிதம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார.
Post a Comment