Header Ads



இலங்கையருக்கு சவூதி அரேபியா விமான நிலையத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்

சவூதி அரேபியாவிலிருந்து லதீப் மொஹமட் நழீம்

சவூதி அரேபியாவிலிருந்து சென்று இலங்கையில் விடுமுறையில் இருந்துவிட்டு மீண்டும் அந்நாட்டுக்கு திரும்பிச்சென்ற இலங்கையர் ஒருவர் தனது லெப்டொப்பில் 320 ஜீ.பீ. கொள்ளளவுகொண்ட ஒரு எக்ஸ்டனல் ஹார்ட்டிஸ்கில் ஆபாசப் படங்களினால் நிரம்பியிருந்ததை சவூதி அரேபியா நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அண்மைக்காலமாக சவூதி அரேபிய விமான நிலையங்களில் எல்லைப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து மார்க்க விடயங்களை கண்காணிக்க சமய பாதுகாவலர்களையும் (முத்துஆ) கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.தங்கள் அணிந்திருந்தால் கண்டிக்கப்படுகிறார்கள்.

அதேபோல் சவூதி அரேபியாவுக்குள் நுழைகிறவர் தனது ஹார்ட்டிஸ்கில் எவ்வாறான விடயங்களுடன் நுழைகிறார்? எவ்வாறான சீ.டி.க்களுடன் நுழைகிறார் என்பதையெல்லாம் பரிசோதிக்க விமான நிலையத்திலேயே ஒரு தனியான அலுவலகம் ஒதுக்கப்ட்டு சோதனை நடாத்தப்படுகிறது.

இவ்வாறான ஒரு பரிசோதனையின் போதுதான் இலங்கையைச் சேர்ந்தவர் மாட்டிக்கொண்டுள்ளார். அவருடைய ஹார்ட்டிஸ்கில் ஆபாசப்படங்கள் நிறைந்திருந்தமையால் உடனடியாக 1000 ரியால்கள் தண்டமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லையேல் சிறைச்சாலை செல்லவேண்டிய நிலையேற்படுமெனவும் விமானநிலைய பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

பலத்த இழுபறிகளுக்கு பின்னர் குறித்த இலங்கையரிடம் இருந்து 500 ரியால்கள் தண்டமாக பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் இவ்வாறான குற்றச்செயல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர் தண்டப் பணத்துடன் விடுதலை செய்யப்பட்டமையானது உண்மையில் ஒரு அதிர்ஷ்டச் சம்பவம் என்றே குறிப்பிடவேண்டியுள்ளது.

குறித்த இலங்கையருக்கு ஏற்பட்ட இந்த கதி, இலங்கையிலிருந்து சவூதி அரேபியா செல்லும் ஏனைய இலங்கையர்களுக்கும் ஏற்படாமலிருப்பதை ஒவ்வொரு தனிநபரும் உறுதிசெய்துகொள்ளட்டும்..!

2 comments:

  1. நகரங்களில் ஆபாச பட வீடியோக்களை விற்பனை/ விநியோகம் செய்யும் வங்கதேசத்தவர்கள் குறித்தும், பகுதிநேர பாலியல் தொழிலில் ஈடுபடும் பிலிப்பைன் பெண் தொழிலாளிகள் குறித்தும், சவூதி அரேபிய ஆண் நண்பர்களைக் கொண்டுள்ள அரவாணி வேடம் போடும் பிலிப்பைன் நாட்டு ஆண்கள் குறித்தும் சவூதி அரேபியாவின்
    மார்க்க பாதுகாவல் துரியினர் (அல் ஹயா) தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. really i hate that the officers what they toke decision against that holder of sex video. shut be put the jail minimum 1 week

    ReplyDelete

Powered by Blogger.