'ரமழானில் தொடரும் ஈமானிய சோதனைகள்'
அப்துல் மஜீத் - (ஆசிரியர் - அல்மசூறா - ஏறாவூர்
உலகின் எந்த மூலையில் எத்தகைய வேலைப்பளுக்களில் நாம் மூழ்கி கிடந்தாலும் ரமழான் மாதம் வந்துவிட்டால் மொத்த வேலைகளுக்கும் ழுமுக்குப் போட்டு விட்டு ரமழானிpன் கடமைகளுக்கே முன்னிடம் கொடுக்கின்றோம். இதுவே யதார்த்தம். இதுவே ரழமானின் மாபெரும் மகத்துவம்.
இத்தகைய மாண்பும் மகத்துவமும் நிறைந்த இம்மாதத்தில்தான் கடந்த வருடம் 'கிறீஸ் மனிதன்' எனும் மிகப்பெரிய ஷைத்தானிய பித்தலாட்டம் ஒன்று நடந்தேறி ஆயிரக்கணக்கானோரின் அமல்கள் அநியாயமாக பாழ்படுத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு முன்பாகவே ஊரெல்லாம் 'மர்ம' அச்சத்தில் முடங்கி போனது.
நாமடைந்திக்கும் இந்த ரமழானிலும் 'தேர்தல்' என்ற பெயரால் மற்றுமொரு மகத்தானசோதனை நம்மை வந்தடைந்திருக்கிறது. இதை விட அது திறம் என்பதைப்போல் கடந்த வருடத்தை விடவும் மிகப்பெரிய ஈமானிய சோதனை இதுதான். அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்லாஹ்வின் கட்டளைகள், அல்லாஹ்வின் ஆற்றல்கள் மற்றும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைகள் ஊர் உலகெல்லாம் ஓங்கி ஒலிக்க வேண்டிய இந்த உன்னதமான காலத்தில்... நமது காதுகளை இங்கே நிரப்பப்போவது என்ன..?
மாறி மாறி ஒருவரை ஒருவர் அசிங்கமாக ஏசிப்பேசுவதும், அவதூறு கூறுவதும் என அநாகரிகம் நிநைந்த அரசியல் சம்பிரதாயமே ஊரெல்லாம் ஒலிக்கப்போகிறது. இதையும் தாண்டி... வெட்டுக்குத்து, ரத்தம் காயம், ஆஸ்பத்திரி, பொலிஸ் கோர்ட்... !!! என ஏறி இறங்கி இழுபட்டுத் திரிய வேண்டிய அவல நிலைகள் வேறு...
உள்ளம் உறைந்து போகும் இன்னுமொரு சோகமான சேதி னெ;னவென்றால்.கடந்த மாகாண சபை தேர்தலின் பின்னர்தான் ஊரே அல்லோல கல்லோல பட்டுப்போன அக்கிரமங்களும் அடாவடித்தனங்களும் நமதூரில் நடந்தேறியது. அப்பாவித்தனமாக இரு வாலிபர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும், வயதான பெண்மணியொருவர் துப்பாக்கியின் ரவைகளுக்கு இலக்காகி துடி துடிக்க மரணமானதும், நூற்றுக் கணக்கான உடமைகள் நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதும் இந்த மாகாணசபை தேர்தல் காலப்பகுதியில்தான்.
ஆகவே இத்தகைய மோசமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலிருந்து நாம் அனைவரும் விடுபட்டாக வேண்டும் அல்லது பாதுகாக்கப்பட்டாக வேண்டும்.
உதவி செய்வதை விடவும் உபத்திரம் செய்யாமலிருப்பது மேல் என்பதைப்போல் நாம் எங்கு எந்த கட்சியில் இருந்தாலும் சங்கை நிறைந்த இந்த மாத்தின் கண்ணியத்திற்கு எந்தவிதமான களங்கமம் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்போம்.

Post a Comment