மஹிந்தவின் இப்தார் - முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணித்ததா..?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று வியாழக்கிழம அலரி மாளிகையில் நடாத்திய இப்தார் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லமை தவிர வேறு எவரும பங்கேற்கவில்லையென அறியவருகிறது.
ஜனாதிபதி நடாத்தும் இப்தால் நிகழ்வில் பொதுவாக முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். இருந்தபோதும் இன்றைய இப்தார் நிகழ்வில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கிய முக்கியஸ்தர்கள் எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை.
இப்தார் நிகழ்வில் பங்கேற்றவர்களில் சிலர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய இப்தார் நிகழ்வை முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணித்ததா என கேள்வியெழுப்பியுள்ளனர். இருந்தபோதும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாகியுள்ளமையால் அங்கு முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இன்று மஹிந்த ராஜபக்ஸ நடாத்திய இப்தார் நிகழ்வின்போது பலஸ்தீன் நாட்டுத் தூதுவர் மஹ்ரிப் தொழுகைக்கான பாங்கு சொன்னதாக அறியவருகிறது.
கவலைப்பட வேண்டாம், தேர்தல் முடிந்ததும் சுன்னத்து நோன்பு பிடித்தாவது, மகிந்தவிடம் இப்தாருக்கு போவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள். தேர்தல் காலத்தில் போனால், யாழ் முஸ்லிம் போன்ற ஊடகங்களில் படம் வெளிவந்து, கிழக்கு மாகாண மக்கள் பார்த்துவிட்டால்? வேண்டாமே வில்லங்கம் என்று சும்மா இருந்திருப்பார்கள்.
ReplyDeleteI agree with La voix in this instance
ReplyDelete