மன்னார் முஸ்லிம்கள் மீது பொலிஸார் கெடுபிடி
நவமணி
மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. மன்னாரில் அண்மையில் நடைபெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்தே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மன்னாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வியாழக்கிழமையும் 5 முஸ்லிம்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்னர்.
மன்னார் முஸ்லிம் பிரதேசங்களில் ரோந்து நடவடிக்கை, முஸ்லிம் வீடுகளில் திட்டமிட்ட சோதனை என பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாகவும் அங்குள்ள முஸ்லிம்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment